தேடல் சுகமானது தேடினால் எல்லாமே கிடைக்கும் உங்கள் வாழ்விலும்..!!

3 days ago
ARTICLE AD BOX

தேடல் உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும் தேடலில் தான் எத்தனை சுகம் வாழ்க்கையின் ஒவ்வொரு தேடலிலும் வாழ்வின் சுவாரஸ்யமான நிகழ்வினை அறிய முடியும். கடலைத் தேடி ஓடும் நதி போல திசையை தேடி ஓடும் காற்று போல வாழ்வில் எது வேண்டுமோ அதை தேடி செல்வதுதான் சிறப்பு…

வாழ்க்கை பயணத்தில் தேடல்கள் எப்போதும் திறந்து கொண்டுதான் இருக்கும் அதுவே வாழ்க்கையின் சுவாரசியம் அது இல்லாவிட்டால் ஊர் வம்புகள் பேசி சோம்பேறிகளாக வாழ வேண்டியதுதான் வாழ்க்கையில் தேட இல்லாவிட்டால் தேங்கிய நிறை போல் சுகம் காண முடியாது சமூகம் நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும் எனவே நதியைப் போல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் வாழ்வில் வசந்தம் வீசும்..

காட்டுவாசியில் இருந்து கம்ப்யூட்டர் வாசி அனைவருக்கும் மனிதர்கள் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள் ஏனென்றால் அதற்கு காரணம் அவர்களுக்குள் இருக்கும் தேடல் தான். வாழ்க்கையின் சுவாரசியமே இந்த தேடல் தான். தேடல் மட்டும் இல்லை என்றால் மத்த விலங்குகளுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போயிருக்கும் தேடுவதோ தேடப்படுவதோ பெரிதில்லை ஆனால் நம்மை தேடுவோர் என்று இருப்பதுதான் கொடிது இருப்பினும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற தேடலை விட்டு விடாமல் தொடர்ந்து தேடிக் கொண்டிருப்பது வாழ்வின் சுவாரசியம். ஒவ்வொரு தோல்வியும் ஒரு அனுபவம் தான் நம்மை அடையும் ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு எச்சரிக்கை தான் வாழ்க்கை ஒரு தேடலில் எத்தனையோ விஷயங்களை நாம் தொலைத்திருப்போம் ஆனால் தேடிக் கொண்டிருக்கும் இலக்கை மட்டும் கைநழவு விடாமல் தேடிக்கொண்டே இருப்பது தான் சிறப்பு உலகில் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும்..

முதலில் நமக்கு எது தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் வாழ்க்கையில் வெற்றி பெற படிப்பு அனுபவம் என்ன இரண்டு மட்டும் போதாது அடுத்தடுத்து என்ன என்ன என்ற தேடல் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். கற்பதற்கு எந்த எல்லையும் கிடையாது ஏற்படும் தடைகளை உடைத்து எறிந்து புதிது புதிதாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் கற்றுக்கொள்வதுடன் நின்றுவிடாமல் சாதித்து காட்டவும் எழ வேண்டும் தேடல் உள்ளவரை மட்டுமே நம்மால் வாழ்க்கையில் பல அழகிய தருணங்களை உணர முடியும். தேடல்கள் மாறிக்கொண்டே இருக்கும் ஆனால் தேடல் ஒன்றே நிரந்தரம் தேடாமல் எதுவும் கிடைப்பதில்லை நம்மை வந்து அடைவதுமில்லை..

யோகிகளும் ஞானிகளும் தேடுதல் நிறைந்தது தான் வாழ்க்கை என்று கூறுகிறார்கள். அதனை அப்படித்தான் அணுக வேண்டும் என்றும் கூறுகிறார்கள் அப்போதுதான் வாழ்வில் ஒருவிதமான ஆர்வமும் படிப்பும் உண்டாகும் வாழ்கின்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் கிடைக்கும் வாழ்க்கை சலிப்பு தட்டாது என்று கூறுகிறார்கள் தேடி தான் பார்ப்போமே வாழ்வின் சுவாரசியத்தை..!!

Read Entire Article