தேங்காய் எண்ணெயுடன் இந்த ஆயில் சேருங்க... இளம் வயது நரையை தடுக்க நடிகை ரேகா சொல்லும் டிப்ஸ்

11 hours ago
ARTICLE AD BOX

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு இளநரை பாதிப்பு இருக்கிறது. சத்துக் குறைபாடு, மரபியல் கோளாறு, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் என இளநரை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 

Advertisment

இவ்வாறு இளநரை ஏற்பட்டால் அதனை போக்குவதற்கு எத்தனையோ முயற்சிகளை மக்கள் மேற்கொள்கின்றனர். இவர்களில் நிறைய பேர் தலைமுடியை கலரிங் செய்கின்றனர். எனினும், கலரிங் செய்வதற்கு பயன்படும் ஹேர் டைய்யில் நிறைய இரசாயனங்கள் கலந்திருக்கும். அவை பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

இந்த சூழலில் இளநரை பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சூப்பர் டிப்ஸை நடிகை ரேகா தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு பாட்டிலில் நம் தலை முடிக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவற்றை ஊற்ற வேண்டும். இவற்றுடன் நெல்லிக்காய் பொடி, வெந்தய பொடி, கருஞ்சீரக பொடி மற்றும் வேப்பிலை பொடி ஆகிய அனைத்தையும் சேர்த்து கலக்க வேண்டும்.

இந்த பாட்டிலை வெயில் படாத குளிர்ச்சியான இடத்தில் ஒரு வாரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். அதன் பின்னர், இந்த எண்ணெய்யை மிதமான சூட்டில் தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யலாம் என்று நடிகை ரேகா அறிவுறுத்துகிறார். இதே முறையை தானும் பின்பற்றுவதாக அவர் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

இப்படி செய்யும் போது இளநரை பிரச்சனை குறையத் தொடங்கும். அதுமட்டுமின்றி, முடியின் வளர்ச்சியை அடர்த்தியாக்கும் ஆற்றலும் இந்த எண்ணெய்க்கு இருக்கிறது. ஏனெனில், முடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது போன்று இயற்கையான பொருட்களைக் கொண்டு ஹேர் ஆயில் தயாரித்தால், அவை நல்ல பலன் அளிப்பதுடன் ஒவ்வாமை மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படும் பாதிப்பை தடுக்க உதவும்.

நன்றி - Rekha's Diary Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Read Entire Article