தெலுங்கானா சுரங்க விபத்து : மீட்பு பணிகளின் நிலை என்ன?

4 hours ago
ARTICLE AD BOX
Telangana Tunnel Collapse

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 22) காலை டோமலபெண்டா அருகே கட்டுமானத்தில் உள்ள SLBC சுரங்கப்பாதையின் ஒருபகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பொறியாளர்கள் உட்பட மொத்தம் 8 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கினர். இந்த சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியானது 8வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணியில் இந்திய ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) என பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் குறித்து நாகர்கர்னூல் காவல் கண்காணிப்பாளர் வைபவ் கெய்க்வாட் PTI செய்தி நிறுவனத்திடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், ” தொழிலாளர்கள் மீட்பில் இடையூறாக இருக்கும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தை (TBM) வெட்டி எடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், “மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இன்று காலை ஒரு குழு சுரங்கப்பாதையில் உள்ளே சென்றது. அங்கு இடையூறாக இருக்கும் தண்ணீர் மற்றும் குப்பைகளை அகற்றி வருகிறது. இந்த இரு பணிகளும் ஒரே நேரத்தில் நடந்து வருகின்றன.” என்று தெரிவித்தார்.

தொழிலாளர்களை மீட்கக்கூடிய பாதையில் என்ன தடைகள் வந்தாலும், அவற்றை நாங்கள் அகற்ற வேண்டும். சுரங்கப்பாதையில் உள்ள கன்வேயர் பெல்ட்டின் சேதமடைந்த பகுதி இன்று சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மேலும் ரேடார் கருவி மூலம் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NGRI) அதிகாரிகள் ஆய்வு செய்த போது சுரங்கத்தில் சில துரதஷ்டவசமான சிக்னல்களை (தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்) பெற்றதாக குறிப்பிடுகின்றனர். இருந்தாலும், ரேடாரில் குறிப்பிடப்பட்ட சிக்னல்களை அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும் என மீட்புப்பணியில் ஈடுபாட்டுல அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Read Entire Article