தெலங்கானாவில் வெப்ப அலை எச்சரிக்கையை வெளியிட்ட ஐஎம்டி!

2 hours ago
ARTICLE AD BOX

ஹைதராபாத்: இந்திய வானிலை ஆய்வு மையம் (ஹைதராபாத்) தனது வானிலை முன்னறிவிப்பில், தெலங்கானாவில் உள்ள பல மாவட்டங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என்ற எச்சரித்துள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு அடிலாபாத், குமுரம் பீம் ஆசிபாபாத், மஞ்செரியல், நிர்மல், நிஜாமாபாத், ஜக்தியால், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் பெத்தபள்ளி ஆகிய இடங்களில் வெப்ப அலை நிலைகள் நிலவக்கூடும். அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றது. மேலும், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை தொடரும் என்ற முன்னறிவிப்பு வழங்கியுள்ளது.

வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். ஹைதராபாத் மற்றும் அண்டை மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு கீழ் இருக்க வாய்ப்புள்ளது.

ஹைதராபாத், ரங்காரெட்டி, விகராபாத், மேட்சல்-மல்கஜ்கிரி, சங்கரெட்டி மற்றும் மேடக் ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதற்கிடையில், ஹைதராபாத்தில் வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை சராசரி அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருப்பதாக தெலங்கானா மாநில மேம்பாட்டு திட்டமிடல் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேபோல், தெலங்கானா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 40.9 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருப்பதாக தெலங்கானா மாநில மேம்பாட்டு திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: அடுத்த மாதம் வட்டி விகிதங்களை குறைக்கும் ஆா்பிஐ!

Read Entire Article