தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா | ஓங்கியிருக்கும் SA-ன் கைகள்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு?

2 hours ago
ARTICLE AD BOX
Published on: 
25 Feb 2025, 3:30 am

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைப்ரிட் மாடலில் நடைபெற்றுவரும் போட்டியில், இதுவரை 6 லீக் ஆட்டங்கள் முடிவை பெற்றுள்ளன.

6 போட்டிகளின் முடிவில் குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தொடரிலிருந்து வெளியேறி அதிர்ச்சியை கொடுத்துள்ளன.

இந்நிலையில் 7வது லீக் போட்டியில் குரூப் பி பிரிவிலிருந்து வெற்றியை ருசித்துள்ள இரண்டு அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

aus vs sa
சாம்பியன்ஸ் டிராபி | அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து.. தொடரிலிருந்து வெளியேறியது PAK, BAN!

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டு அணிகளூம் 110 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா 55 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணி 51 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

அதுமட்டுமில்லாமல் கடைசி 5 ஒருநாள் போட்டிகளின் மோதல்களிலும் 4-1 என தென்னாப்பிரிக்காவின் கைகளே ஓங்கியுள்ளது.

aus vs sa
aus vs sa

இருப்பினும் 352 ரன்கள் என்ற இமாலய சேஸிங் வெற்றிக்கு பிறகு வரும் ஆஸ்திரேலியா அணியை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. போட்டி நடைபெறும் ராவல்பிண்டி மைதானமும் அதிக ஸ்கோரிங் ஸ்டேடியம் என்பதால், மீண்டும் ஒரு பெரிய ரன்சேஸிங் போட்டியாக அமைய வாய்ப்பிருக்கிறது. வேகப்பந்துவீச்சிற்கும் தொடக்கத்தில் சாதகமாக இருக்கும் என்பதால், ஆரம்பத்தில் விக்கெட்டை வீழ்த்தும் அணி சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்த இரண்டு அணிகள் மோதலில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியல் முதலிடத்தை பிடிக்கும்.

aus vs sa
அதிக சதங்கள், அதிகபட்ச ஸ்கோர், டோட்டல்.. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றின் 28 சாதனைகள்! முழு விவரம்!
Read Entire Article