ARTICLE AD BOX
தூத்துக்குடி கொத்தனாரு பிடிச்சுருக்கு... டிராகன் பட இசையமைப்பாளர் ஓபன் டாக்!
சென்னை: சினிமா ரசிகர்களுக்கு வைப் செய்யும் வகையில் ஆல்பம் பாடல்கள், அல்லது ரீ கிரியேட் ஆகும் தமிழ் பாடல்களை லூப் மோடில் கேட்டு கொண்டாடி தீர்ப்பார்கள். அந்த வகையில் அசல் கோளாறு யார்டா அந்த பையன், பால் டப்பா, சாய் அபயங்கரின் கட்சி சேர பாடல்களும் பெரிய அளவில் ஹிட் அடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. சில நேரங்களில், சினிமா அல்லது ஆல்பம் பாடல்களை காட்டிலும் எக்குத்தப்பான பாடல்களும் ஹிட் ஆகும். தூத்துக்குடி கொத்தனார் பாட்டில் அப்படி என்ன ரசிப்பு தன்மை இருக்கிறதோ தெரியவில்லை, சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இசையமைப்பாளருக்கு அந்த பாடல் ரொம் பிடித்திருக்கிறதாம்.
சின்ன ராசாத்தி: சமீபத்தில் ஒரு பெண் தனது நண்பர்களுடன் ஜாலியாக காரில் ட்ரிப் சென்றார். அப்போது அந்த காரில் ஒலித்த அமுக்கு அமுக்கு... தூக்கு தூக்கு... என ஆரம்பிக்கும் வரிகளோடு அவரும் சேர்ந்து பாட அந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரல் ஆனது. சின்ன ராசாத்தி முறுக்கு சுட்டாளாம் என்ற வரிகளை கேட்காத ஆளே இல்லை. ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் வந்த பிறகு தான் இப்படி டிரெண்டிங் என்ற சொல் வந்துவிட்டதோ என்று எண்ண வேண்டாம். 90களில் கிராமத்து பாடல்கள் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளன.
கிராமத்து பாடல்கள்: ஓட்டடா ஓட்டடா கம்பத்துல, ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியா, கண்கள் உறங்கிய போதும் கவிதை பா வேண்டும் உள்ளிட்ட பல பாடல்களை திரை ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். ஊர் திருவிழா, கச்சேரி போன்ற விழா மேடைகளில் ஒலிக்க விட்டு ஆட்டம் போட்டுள்ளனர். இப்படி காலத்திற்கேற்றார் போல் பாடல்களும் வெளியாகி டிரெண்டாகின்றன. காலை முதல் மாலை வரை உழைக்கும் மக்களுக்கு மனதிற்கு இதமாக இருப்பது இசை தான். இசைஞானி, ராகதேவன் என மக்களின் மனதில் நீங்கா பிடிக்க காரணம் இசை தான். ஆனால், இன்றைய சூழலில் இசையென்பது கொண்டாட்டமாக வைப் மோடுக்கு மாறியுள்ளது.

சீச்சி சீச்சி பாடல்: பாடலின் அர்த்தம் புரியவிட்டாலும் சமூக ஊடகத்தில் மொழிநாடு கடந்து எத்தனையோ பாடல்கள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டா பக்கங்களை திறந்தால் சீச்சி என்ற பாடல்களே ஒலித்தன. ஆனால், இந்த பாடல் வெளியாகி 20 வருடங்கள் கழித்து டிரெண்டாகி இருப்பது தான் ஆச்சர்யம். இப்பாடலில் நடித்த நடிகர் விபூதி பூசன் பிஸ்வால் . அதேபோன்று தற்போது தூத்துக்குடி கொத்தனாரு பாடலும் பெரிய அளவில் டிரெண்டிங்காகி வருகிறது. சமீபத்தில் இசையமைப்பாளர் யுவனிடமே இப்பாடல் குறித்து விஜே சித்து பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி கொத்தனாரு: ஓ மை கடவுளே, டிராகன் படத்தில் ஹிட் பாடல்களை இசையமைத்த லியோன் ஜேம்ஸ் சமீபத்தில் யூடியூப் சேனலில் பேட்டியளித்தார். அப்போது தூத்துக்குடி கொத்தனார் பாடல் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நிதானமாக பதில் அளித்த அவர், மக்கள் ரசனை மாறிவிட்டது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என பல ஜாம்பவான்கள் வந்து விட்டனர். தூத்துக்குடி கொத்தனார் மட்டும் இல்லை சீச்சி பாடலும் ஹிட் ஆவலது நல்லதாகத்தான் பார்க்கிறேன். தூத்துக்குடி கொத்தனாரு பாடல் பிடித்திருக்கு என்றே அவர் கூறினார். மக்களுக்கு பிடித்ததால் தான் அப்பாடலை திரும்ப திரும்ப பாடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். ஓ மை கடவுளே படத்தில் இடம்பெற்ற கதைப்போமா பாடல் மூலம் இளைஞர்களின் இதயத்தை கவர்ந்த லியோன் ஜேம்ஸ் சொல்வது சரிதானே என்றும் நெட்டிசன்கள் கமாண்ட் செய்கின்றனர்.