ARTICLE AD BOX
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் நாட்டிற்கு செல்ல மறுத்த இந்திய அணி தங்களது அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் விளையாடும் படி அட்டவணை வெளியாகி ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடி முடித்திருந்தது.
துபாய் மைதானம் உண்மையிலேயே கஷ்டமா இடுக்கு : சுப்மன் கில்
அந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்த இந்திய அணியானது அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது முக்கிய லீக் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரின் போது முதல் போட்டியில் சதம் அடித்து அசத்திய இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக துபாய் மைதானம் குறித்த சில சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டி என்றாலே எப்போதும் பெரிய வரலாறு இருக்கிறது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டியை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கண்டுகளிப்பார்கள். அந்த வகையில் இந்த போட்டியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. நாங்கள் இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற தான் முயற்சி செய்வோம்.
பாகிஸ்தான் அணி தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் அவர்களை எளிதான அணியாக நாங்கள் குறைத்து மதிப்பிட மாட்டோம். அதேபோன்று துபாய் மைதானமும் பேட்டிங் செய்ய அவ்வளவு எளிதாக இல்லை. ஏனெனில் கடந்த போட்டியின் போது பனிப்பொழிவு என்பது சுத்தமாக இல்லை எனவே இரண்டாவது பேட்டிங் செய்ய கடினமாக உள்ளது. சிங்கிள் எடுக்கவே போராட வேண்டிய நிலை உள்ளது.
இதையும் படிங்க :
எனவே இரண்டாவது போட்டியை பொறுத்த வரை டாசில் வெற்றி பெறுவது குறித்து எல்லாம் யோசிக்க தேவையில்லை பனிப்பொழிவு இல்லாத நேரத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் நெருக்கடி இருக்கும் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.
The post துபாய் மைதானம் நாங்க நெனச்ச மாதிரி இல்ல.. அச்சத்தை தெரிவித்த சுப்மன் கில் – விவரம் இதோ appeared first on Cric Tamil.