ஆப்கானிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் இங்கிலாந்து

6 hours ago
ARTICLE AD BOX

Published : 26 Feb 2025 05:28 AM
Last Updated : 26 Feb 2025 05:28 AM

ஆப்கானிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் இங்கிலாந்து

<?php // } ?>

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு லாகூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுமே தங்களது முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருந்தது. இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் ஆப்கானிஸ்தான் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடமும் தோல்வி அடைந்திருந்தன. இதனால் இரு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும்.

ஏனெனில் ‘பி’ பிரிவில் ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா 3 புள்ளிகளை பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இங்கிலாந்து அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 350 ரன்களை குவித்த போதிலும் மோசமான பந்துவீச்சால் தோல்வியை சந்தித்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

அதேவேளையில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி ஆகியோர் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீபகாலமாக இங்கிலாந்து அணி தரமான சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறி வருகிறது. இதற்கிடையே ஆல்ரவுண்டரான பிரைடன் கார்ஸ் அணியில் இருந்து விலகி உள்ளது இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவை கொடுக்கக்கூடும். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளரான ரேஹான் அகமது சேர்க்கப்படக்கூடும்.

இது ஒருபுறம் இருக்க தொடக்க வீரரான பில் சால்ட், நடுவரிசை பேட்ஸ்மேனான ஹாரி புரூக் ஆகியோர் பார்மின்றி தவிப்பது அணியின் சமநிலையை பாதிப்பதாக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் பில் சால்ட் கடைசியாக 2022-ம் ஆண்டு சதம் அடித்திருந்தார். அதன் பின்னர் பங்கேற்ற ஆட்டங்களில் 30 அல்லது 40 ரன்களை விரைவாக எடுத்து ஆட்டமிழப்பது தொடர்கதையாக உள்ளது. ஹாரிபுரூக்கும் விரைவாக விக்கெட்டை பறிகொடுப்பது வாடிக்கையாக உள்ளது.

அதிலும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஹாரி புரூக் நம்பிக்கையின்றி விளையாடுவது அவரது திறமை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்திய சுற்றுப்பயணத்தில் சுழலில் தடுமாறிய ஹாரிபுரூக், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடம் ஸாம்பாவிடம் வீழ்ந்தார். ஆப்கானிஸ்தான் அணியில் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் 26 வயதான ஹாரி புரூக் மீண்டும் ஒரு முறை நெருக்கடியை சந்திக்கக்கூடும்.

ஆப்கானிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டுவர முயற்சிக்கக்கூடும். இதே வீரர்களை கொண்ட அந்த அணி கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் அரை இறுதி சுற்றுவரை முன்னேறியிருந்தது. ஆனால் ஒருநாள் போட்டியை பொறுத்தவரை செயல்திறன் மற்றும் கள உத்திகளை செயல்படுத்துவதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிக நிலைத்தன்மை தேவையாக உள்ளது. அந்த அணியில் திறமை உள்ளது. ஆனால் அதை சரியாக பயன்படுத்தி எதிரணிக்கு நெருக்கடியை உருவாக்கி வெற்றி பெறுவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article