ARTICLE AD BOX
2025-ஆம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற பாகிஸ்தான் அணியானது தங்களது முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியிடமும், இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணியிடமும் தோல்வியை தழுவியதால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றின் முடிவிலேயே இந்த தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.
பாகிஸ்தான் அணியை காப்பற்றப்போவது யார்? : யோக்ராஜ் சிங் விளாசல்
பாகிஸ்தான் அணி அடைந்த இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதோடு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பாகிஸ்தான் அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அந்த அணியின் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. மேலும் பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள், கேப்டன் என அனைவரையுமே மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி இப்படி மோசமான சூழ்நிலையை சந்தித்திருக்கும் வேளையில் அந்த அணியை காப்பாற்ற தான் முன்வருவதாகவும், அதேபோன்று முன்னாள் வீரர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பது குறித்தும் சில விமர்சனங்களை இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் முன் வைத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : வாசிம் அக்ரம் போன்ற முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் சென்று வர்ணனை செய்து அதில் பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்களது நாட்டிற்கு உதவ முன்வந்து பயிற்சி முகாம்களை அவர்கள் நடத்த விரும்பவில்லை.
என்னை பொறுத்தவரை பாகிஸ்தான் ஜாம்பவான்கள் அந்நாட்டு கிரிக்கெட்டை காப்பாற்ற உதவ முன்வர வேண்டும். மீண்டும் பாகிஸ்தான் அணியை யார் சாம்பியன் அணியாக மாற்றி காட்டப் போகிறார்கள்? என்று தெரியவில்லை. உங்களுக்கு விருப்பமில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். என்னிடம் முழுமையாக பாகிஸ்தான் அணியை கொடுங்கள் ஒரே ஆண்டில் புதிய அணியை கட்டமைத்து நான் வெற்றி பெற வைக்கிறேன் என யோக்ராஜ் சிங் காட்டமாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணி இப்படி சீரழிய பாபர் அசாம் செய்த இந்த தவறு தான் காரணம் – முன்னாள் பாக் வீரர் குற்றச்சாட்டு
ஏற்கனவே இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களிலும் விளையாடி தோல்வியை சந்தித்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணியானது தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்த்து வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி ராவல்பிண்டி மைதானத்தில் விளையாடயிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post பாகிஸ்தான் அணியை காப்பாற்றப்போவது யார்? : யோக்ராஜ் சிங் கேள்வி appeared first on Cric Tamil.