துணைக்கேப்டனாக நான் ஏதாவது மாற்றங்கள் சொன்னா தோனி இதைதான் செய்வாரு – விராட் கோலி பகிர்வு

21 hours ago
ARTICLE AD BOX

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி கடந்த 2017-ஆம் ஆண்டிற்கு பிறகு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலக இந்திய அணியை பல ஆண்டுகளாக கட்டுக்கோப்பாக வழிநடத்தி பல்வேறு வெற்றுக்களை பெற்று கொடுத்தார். அவரது தலைமையில் இந்திய அணி ஐசிசி தொடர்களை கைப்பற்றவில்லை என்று என்றாலும் மிகப் பெரிய அளவில் பல்வேறு சரித்திர வெற்றிகளை பெற்றிருந்தது.

தோனியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் : விராட் கோலி

கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியை அவர் சிறப்பாக வழி நடத்தி இருந்தாலும் ஐசிசி கோப்பைகளை கைப்பற்ற முடியாத ஏமாற்றத்தால் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய அவர் தற்போதும் இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வருகிறார்.

அதேபோன்று ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வந்த அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதற்காக கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தபோது விராட் கோலி துணை கேப்டனாக எவ்வாறு செயல்பட்டார்? என்பது குறித்தும், தோனியுடன் நடைபெறும் உரையாடல்கள் குறித்தும் சில சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணிக்காக தோனி கேப்டனாகவும், நான் துணை கேப்டனாகவும் இருந்தபோது ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு ஓவரின் போதுமே நான் அவரிடம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டேன் .மேலும் ஒரு துணை கேப்டனாக நான் அவர் அருகே சென்று பீல்டரை எங்கு நிக்க வைக்கலாம்? எங்கு கேட்ச் வரும்? போட்டியை எப்படி வெல்லலாம்? என்று அவரிடம் ஏதாவது பேசினால் :

அவர் நான் பேசுவதை கேட்டுவிட்டு “இது என்ன பைத்தியக்காரத்தனம் போல் உள்ளது”, என்ற வகையில் வித்தியாசமான முகபாவனையை காண்பித்து விட்டு சென்று விடுவார். ஏனெனில் என்னுடைய திட்டங்களும், அவருடைய யோசனையும் வெவ்வேறாக இருக்கும். ஆனால் இருவருமே வெற்றியை நோக்கி மட்டுமே யோசிப்போம் என விராட் கோலி கலகலப்பாக கூறினார்.

இதையும் படிங்க : 60/5 டூ 190/7 ரன்ஸ்.. நான் பவர் ஹிட்டராக உலகின் சிறந்த கேப்டன் தோனி தான் கரணம்.. 2016 பின்னணி பற்றி பெரேரா

தோனியின் தலைமையின் கீழ் 2011 உலகக் கோப்பை மற்றும் 2023 சாம்பியன்ஸ் டிராஃபி ஐசிசி கோப்பை வென்ற இந்திய அணியில் விராட் கோலி அவருடன் இருந்துள்ளார். ஒரு வீரராக விராட் கோலி 4 ஐசிசி கோப்பையை கைப்பற்றிய விராட் கோலி இதுவரை கேப்டனாக ஒரு ஐ.சி.சி கோப்பையை கூட பெற முடியாதது அவரது ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் ஒரு வருத்தமான விடயமாகவே இருந்து வருகிறது.

The post துணைக்கேப்டனாக நான் ஏதாவது மாற்றங்கள் சொன்னா தோனி இதைதான் செய்வாரு – விராட் கோலி பகிர்வு appeared first on Cric Tamil.

Read Entire Article