துணை முதல்வர் உதயநிதி தலைமை​யில் மாநில திட்ட குழுவின் ஆய்வு கூட்டம்

1 day ago
ARTICLE AD BOX

Published : 25 Feb 2025 05:37 AM
Last Updated : 25 Feb 2025 05:37 AM

துணை முதல்வர் உதயநிதி தலைமை​யில் மாநில திட்ட குழுவின் ஆய்வு கூட்டம்

<?php // } ?>

சென்னை: மாநில திட்டக் குழு​வின் கூட்​டம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை​யில் சென்னை​யில் நேற்று நடந்​தது. மாநில திட்டக் குழு​வின் அலுவல் சார் துணைத் தலைவரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை​யில், மாநில திட்டக் குழு​வின் ஆய்வு கூட்டம் சேப்​பாக்​கத்​தில் நேற்று நடைபெற்​றது.

மாநில திட்டக் குழு​வால் இதுவரை தயாரிக்​கப்​பட்டு முதல்வர் மு.க.ஸ்​டா​லினுக்கு அளிக்​கப்​பட்ட அரசின் முன்னோடி திட்​டங்களுக்கான மதிப்​பீட்டு ஆய்வு​கள், சிறப்பு ஆய்வுகள் குறித்​தும், தற்போது நடைபெற்று வரும் ஆய்வுகள் குறித்​தும், மாநில திட்ட குழு​வால் நடைமுறைப்​படுத்​தப்​படும் சிறப்பு திட்​டங்கள் குறித்​தும் துணை முதல்வர் விரிவாக கேட்​டறிந்து ஆய்வு மேற்​கொண்​டார்.

முதல்​வரின் சிறப்பு திட்​டங்​களால், தமிழகத்​தின் குக்​கிராமங்​களில் உள்ள சாமானிய மக்கள் முதல் நகரத்​தில் வாழும் மக்கள் வரை எந்த அளவில் பயன் பெற்றுள்​ளார்​கள், இந்த திட்​டங்கள் அவர்​களின் வாழ்​வில் ஏற்படுத்​தி​யுள்ள முன்னேற்​றங்​கள், மாற்​றங்கள் குறித்து திட்​டக்​குழு மேற்​கொண்ட ஆய்வு​களில் கிடைத்த புள்ளி விவரங்களை துணை முதல்வர் விரிவாக கேட்​டறிந்​தார்.

இக்கூட்​டத்​தில் மாநில திட்டக் குழு​வின் செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்​சன், முதல்​வரின் செயலாளர் பிரதீப் யாதவ், நிதித்துறை செயலாளர் த.உதயச்​சந்​திரன், மாநில திட்டக் குழு உறுப்​பினர் செயலர் எஸ்.சுதா, முழு நேர உறுப்​பினர் இராம.சீனுவாசன், கூடுதல் முழு நேர உறுப்​பினர் ம.விஜயபாஸ்​கர் மற்றும் பகுதிநேர உறுப்​பினர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article