தீவிரமாக நடைபெறும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு….. பிரபல நடிகர் பங்கேற்பு?

11 hours ago
ARTICLE AD BOX

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிரபல நடிகர் ஒருவர் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தீவிரமாக நடைபெறும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு..... பிரபல நடிகர் பங்கேற்பு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் நடிகர் ரஜினி, ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி ப்ரோமோ வீடியோவும் இணையத்தை கலக்கியது. தீவிரமாக நடைபெறும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு..... பிரபல நடிகர் பங்கேற்பு?இருப்பினும் இந்த படத்தில் யார் யார்? நடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி ஜெயிலர் 2 திரைப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் சல்மான் கான், நந்தமுரி பாலகிருஷ்ணா, சஞ்சய் தத் ஆகியோர் கேமியோ ரோல்களில் நடிக்க உள்ளதாகவும் சமீபகாலமாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீவிரமாக நடைபெறும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு..... பிரபல நடிகர் பங்கேற்பு?இந்நிலையில் இதை படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா பங்கேற்றுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நடிகர் எஸ்.ஜே. சூர்யா, ஜெயிலர் 2 திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இவர், ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அவருடைய கதாபாத்திரம் குறித்த ஆர்வத்தை தூண்டி உள்ளது. இருப்பினும் படக்குழு சார்பில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

Read Entire Article