"தீயசக்தி திமுகவை வேரறுத்து ஏறிய வேண்டும்" - அண்ணாமலை பேச்சு.! 

4 days ago
ARTICLE AD BOX

பிரதமர் மோடி அரசு காங்கிரஸ் அரசை விட 5 மடங்கு தொகையை தமிழ்நாடு அரசுக்கு நேரடியாக வழங்கி இருக்கிறது என அண்ணாமலை பேசினார்.

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "திமுக என்ற இயக்கத்தை தமிழ்நாட்டில் இருந்து வேரோடு தூக்கி ஏறிய வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டை ஆண்வடனால் கூட காப்பாற்ற இயலாது. திமுக என்ற தீய சக்தியை அறுத்து ஏறிய வேண்டும் நேரம் இது. 

5 மடங்கு அதிகம்

காங்கிரஸ் மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட நிதியை விட, பிரதமர் மோடி அரசு 5 மடங்கு அதிகம் நேரடி பணம் கொடுத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு 1 இலட்சத்து 52 ஆயிரம் கோடி மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் 6 இலட்சத்து 14 ஆயிரம் கோடி தொகை தமிழ்நாடு அரசுக்கு பணமாக வழங்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியை விட 5 மடங்கு அதிகம் ஆகும்.

இதையும் படிங்க: #Breaking: பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா? பயமே இல்லை - அண்ணாமலை கடும் கண்டனம்.!

கூடுதலாக ஒரு மொழியை கத்துக்கோங்க

தமிழ்நாடு மக்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி உணர்வுப்பூர்வ நம்பிக்கை வைத்துள்ளார். குழந்தைகள், மாணவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால், 3 மொழி வேண்டும் என கூறுகிறார்கள். தமிழ், ஆங்கிலம் தவிர்த்து மலையாளம், ஹிந்தி, கன்னடம் என எந்த மொழியாளனாலும் படித்துக்கொள் என மத்திய அரசு கூறுகிறது. திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. அது ஏழை மாணவர்களுக்கு கிடைக்க கூடாது என அவர்கள் எதிர்க்கிறார்கள்" என பேசினார்.  

இன்றைய தினம், கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில், தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி, பெரும் திரளெனக் குடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது நாடு வளர்ச்சிப் பாதையில் பயணித்துக்… pic.twitter.com/VJHSuCxFjI

— K.Annamalai (@annamalai_k) February 19, 2025

 

இதையும் படிங்க: #Breaking: விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்? - அண்ணாமலை விளக்கம்.! 

Read Entire Article