Parasakthi Update: மதுரையில் படப்பிடிப்பு நிறைவு; இலங்கையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு

3 hours ago
ARTICLE AD BOX
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் `பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் தகவல் பலரும் அறிந்ததே. சமீபத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பி.டி.எஸ் காட்சிகள் சிலவற்றை வெளியிட்டிருந்தது படக்குழு. அதுமட்டுமல்ல, படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயனின பிறந்தநாளையும் படக்குழுவினர் கொண்டாடியிருந்தனர். இதுமட்டுமல்ல, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு படக்குழுவுக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்தும் வைத்திருந்தார்.

மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பிள்ளையார்பட்டி உட்பட சில பகுதிகளில் `பராசக்தி' படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தும் புகைப்படங்களும் காணொளிகளும் இணையத்தில் வைரலாகப் பரவியது. மதுரையில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம். இதனை இயக்குநர் சுதா கொங்கராவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உறுதி செய்திருக்கிறார். அந்தப் பதிவில் அவர், `` இந்தக் கிரகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடமான மதுரையில் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

SK Parasakthi Movie Update

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவிருக்கிறதாம். நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்தப் பேசிய ரவி மோகன் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். அவர், ``முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவிருக்கிறது. இலங்கைக்கு மிக விரைவில் நாங்கள் செல்லவிருக்கிறோம்." எனக் கூறியிருந்தார். ப்ரீயட் கதைகளத்தில் உருவாகும் இப்படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம்தான் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம்

Read Entire Article