தீப்பெட்டியில் தண்ணீர் பட்டுவிட்டால்...?

2 hours ago
ARTICLE AD BOX

நவீன வாழ்க்கை முறையில் நேரத்தை மிச்சப்படுத்தவும், வேலைகளை எளிதாக்கவும் பலரும் புதிய வழிகளை தேடுகிறோம். அன்றாட வாழ்வில் சில எளிய யுக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் நம் நேரத்தையும் சக்தியையும் சேமிக்க முடியும்.

* தீப்பெட்டி தண்ணீருக்குள் விழுந்தால் அதை வெயிலில் காய வைப்போம். ஆனாலும் அது வேலைக்கு ஆகாது போனால், தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆனால் இந்த ட்ரிக்கை பாலோ செய்வதன் மூலம் மீண்டும் அதில் தீப்பற்ற வைக்கலாம். அதாவது, தீப்பெட்டியின் பக்கவாட்டில் உரசக்கூடிய இடத்தில், சிறிது முக பவுடரைத் தேய்த்துப் பாருங்கள். தீக்குச்சி உடனடியாக பற்றிக் கொள்ளும்.

* தினசரி ப்ரிட்ஜில் தக்காளியை வைப்பதால் வேகுவதற்கு தாமதமாகும். அதனைத் தவிர்க்க, தக்காளியை வெட்டிய உடன் சிறிது உப்பு தூவி வைக்கவும். இது தக்காளி சீக்கிரம் வேகுவதற்கு உதவும்.

* பொதுவாகவே பெண்களுக்கு தலையில் பூ சூடுவது பிடிக்கும். அதுவும் மல்லிகை பூ என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அப்படி மல்லிகை பூவில் நடுவில் கலர் கலர் பூக்கள் வைத்தால் அது உங்களை எடுப்பாக காட்டும். பூக்களில் உங்களுக்கு தேவையான நெயில் பாலிஷ் கலரை தடவி விட்டால் போதும். பூக்களுக்குள் இடையில் இந்த கலர் பூவை வைத்து கட்டுவதால் அது அழகாக இருக்கும்.

*பூக்களைக் கோர்த்து கட்டுவது சிலருக்குச் சிரமமாக இருக்கும். அவர்கள் 5 பூக்களாக சிறியதாகக் கட்டி வைத்துக் கொள்ளலாம். பின்னர், ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதன் வழியாக நூலை ஊசியால் குத்தி வைக்கவும். தனித்தனியாகக் கட்டிய பூக்களை அந்த நூலில் கோர்த்து எடுக்கவும். இது பூக்களை நெருக்கமாகவும் அழகாகவும் கட்ட உதவும்.

*பெருங்காய டப்பாவை காலியானதும் தூக்கி எறிய வேண்டாம். அதைக் கழுவி, கோதுமை மாவு, மைதா மாவு போன்றவற்றைப் போட்டு வைக்கலாம். சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும் போது இந்த டப்பாவிலிருந்து மாவைத் தூவிக் கொள்ளலாம். 

இது போன்ற ஈஸி டிப்ஸ்களை தெரிந்து கொள்ள கல்கி ஆன்லைனோடு தொடர்பில் இருங்கள்.

இதையும் படியுங்கள்:
தக்காளியை சில நாட்கள் கெட்டுப்போகாமல் பத்திரமாக வைக்க சில டிப்ஸ்..!
kitchen tips
Read Entire Article