தீங்கு விளைவிக்கும் என்றால், DeepSeek-ஐ பயன்படுத்த வேண்டாம்!. டெல்லி உயர்நீதிமன்றம்!

5 hours ago
ARTICLE AD BOX

“DEEP SEEK” செயற்கை நுண்ணறிவு செயலி தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியது தானே என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சீனாவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்ட நிறுவனம் தயாரித்த “DeepSeek” செயலி இந்திய பயனாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதனை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு கடந்த பிப்ரவரி 12ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வழக்கில் வழக்கறிஞர் ஒருவரை இணைக்க வேண்டும் என உயர் நீதிமனறம் தெரிவித்ததோடு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 16ம் தேதி ஒத்திவைத்தது.

இந்நிலையில் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக்கோரி டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா அமர்வில் இன்று முறையிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “DeepSeek” செயலி பயனாளர்களுக்கு ஆபத்தை தரக்கூடும் என்றால், அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், மாறாக அதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளதா? என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியதோடு, அவசர வழக்காக விசாரிக்க கூடிய அளவிற்கு முகாந்திரம் இல்லை என தெரிவித்து வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.

Readmore: கனடாவின் புதிய குடிவரவுச் சட்டங்கள் இந்திய மாணவர்கள், தொழிலாளர்களை எவ்வாறு பாதிக்கும்?.

The post தீங்கு விளைவிக்கும் என்றால், DeepSeek-ஐ பயன்படுத்த வேண்டாம்!. டெல்லி உயர்நீதிமன்றம்! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article