“மேடை ஏறியதும் முதல் அழைப்பு”.. யாருக்கு தெரியுமா..? விஜய் என்ன சொன்னாருன்னு நீங்களே பாருங்க…!!

4 hours ago
ARTICLE AD BOX

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் ஈசிஆரில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்டில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கிட்டத்தட்ட 2500 பேர் கலந்து கொண்டுள்ள நிலையில் முதலில் தமிழக வெற்றி கழகத்தின் கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்தார். அதாவது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுக்கு வலியுறுத்தியும் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் நடிகர் விஜய் வந்தது முதலில் பிரசாந்த் கிஷோரை மேடைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். முன்னதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் அடிக்கடி ஆலோசனை நடத்திய விஜய் தற்போது அவரை முதலில் மேடைக்கு வருமாறு அழைத்தது பேசும் பொருளாக மாறியுள்ளது. இதற்கிடையில் கையெழுத்து இயக்கத்தை நடிகர் விஜய் தொடங்கி வைத்த போது அதில் கையெழுத்து போட பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் செல்போன் கொண்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read Entire Article