ARTICLE AD BOX

இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரான ஐபிஎல்-ன் சீசன் 18 வருகின்ற மார்ச் 22ஆம் தேதி 10 அணிகளுடன் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத இருக்கின்றன. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடர் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நடக்க இருக்கும் 18வது ஐபிஎல் தொடரின் தொடக்க விழா கொண்டாட்டமானது முன்பு எப்போதும் இல்லாத விதமாக போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன்படி வருகிற இருபத்து இரண்டாம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் தொடக்க விழா கொண்டாட்டத்தின் ஹிந்தி நடிகை திஷா பதானி மற்றும் பாடகி ஸ்ரேயா கோஷல் பங்கேற்க உள்ளார்கள். மற்ற இடங்களில் கலந்து கொள்ள பிரபலங்களின் தேர்வானது நடந்து வருகிறது.