ARTICLE AD BOX
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் சாகல் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகி இருக்கிறது. தனஸ்ரீக்கும் சாகலுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. மனைவி தனஸ்ரீ ஆண் நண்பர்களுடன் சுற்றித் திரிவதாக சமூக வலைத்தளத்தில் புகார்கள் எழுந்தது.
மேலும் சாகலின் சக நண்பர்களுடன் தனஸ்ரீ நெருக்கம் காட்டிய புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் சாகல் மனம் உடைந்து வாழ்ந்த சூழலில் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய முடிவெடுத்தார்கள்.

இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கணவன் மனைவி விவாகரத்து பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த ஆறு மாதத்தில் மனமாற்றம் ஏற்பட்டால், இருவரும் விவகாரத்து மனுவை வாபஸ் பெறலாம்.
இந்த நிலையில் தான் சாகல் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், இருவரும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு வந்திருந்த புகைப்படங்கள் வெளியானது. இந்த சூழலில் சாகல் ஐபிஎல் போட்டிகளில் விளையாட இருக்கிறார். இதனால் அடுத்த இரண்டு மாதத்திற்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட இருக்கிறார்.
இதனால் அவரால் வேறு எந்த பணியும் செய்ய முடியாது. இதனை காரணம் காட்டி நீதிமன்றத்தில் சாகலும் அவருடைய மனைவி தனஸ்ரீ புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பிரிந்து வாழ்வதுதான் சரி என்ற முடிவை எடுத்து இருக்கின்றோம்.இதனால் எங்களுக்கு ஆறு மாதம் காத்திருப்பு நேரம் தேவையில்லை. எங்களுக்கு உடனே விவாகரத்து தாருங்கள் என்று கூறியிருக்கின்றனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு தொடர்பாக குடும்பவியல் நீதிமன்றம் முடிவு எடுக்கட்டும் என கூறியிருக்கிறார். இந்த நிலையில் சாகல் தமக்கு ஜீவனாம்சமாக நான்கு கோடி ரூபாய் தர வேண்டும் என அவருடைய மனைவியிடம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தனஸ்ரீயின் இந்த கோரிக்கையை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். வரும் ஐபிஎல் தொடரில் 18 கோடி ரூபாய்க்கு விலை போய் உள்ள சாகல் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.