தில்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன்!

3 hours ago
ARTICLE AD BOX

மகளிர் பிரீமியர் லீக்கில் பரபரப்பான இறுதிப் போட்டியில் தில்லி அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 44 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, நாட் ஷிவர் பிரண்ட் 30 ரன்களும், அமன்ஜோத் கௌர் 14 ரன்களும் எடுத்தனர்.

பின்னர், 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தில்லி அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், மும்பை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

தில்லி அணியில் அதிகபட்சமாக மரிசான்னே காப் 40 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்களும் எடுத்தனர். மும்பை அணியில் சிறப்பாக பந்துவீசிய நாட் ஸ்கைவர்-பிரண்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Read Entire Article