ARTICLE AD BOX
திருவண்ணாமலை,அருணாசலேசுவரர் கோவிலில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
பணி: தட்டச்சர் - 1
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை அல்லது தமிழில் முதுகலை மற்றும் ஆங்கிலத்தில் இளங்கலை அல்லது ஆங்கிலத்தில் முதுகலை மற்றும் தமிழில் இளங்கலை முடித்திருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாடு மற்றும் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
பணி: காவல் - 70(ஆண்கள்-60, பெண்கள்-10)
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பணி: கூர்க்கா - 2
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பணி: ஏவலாள்(பண்மை சாகுபடி) - 2
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பணி: உபகோவில் பெருக்குபவர் - 2
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பணி: கால்நடை பராமரிப்பாளர் - 1
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பணி: உபகோவில் காவலர்- 2
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பணி: திருமஞ்சனம் - 3
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பை முடித்தற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: முறை ஸ்தானீகம் - 10
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பை முடித்தற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஒடல் - 1
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும்
இசைப்பள்ளிகளில் இருந்து தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தாளம் - 3
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும்
இசைப்பள்ளிகளில் இருந்து தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 1.7.2024 தேதியின் 18 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தொடர்பான விவரங்கள் தகுதியானவர்களுக்கு தபால் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hrce.tn.gov.in அல்லது https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவுத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது திருக்கோவில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி பெற்று, பூர்த்தி செய்து அதனுடன்
தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அதனுடன் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட ஒப்புகை அட்டை, அஞ்சல் உறை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மீது பணியின் வரிசை எண் மற்றும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை - 606601
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடை நாள்: 28.2.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.