ARTICLE AD BOX
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான சாக்சி அகர்வாலுக்கு கடந்த மாதம் திருமணம் ஆன நிலையில், அவர் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். தற்போது, அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சாக்சி அகர்வால், கடந்த மாதம் மூன்றாம் தேதி கோவாவில் தனது நீண்ட நாள் காதலர் நவ்நீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், “தனது நீண்ட கால நண்பரையே திருமணம் செய்து கொண்டதன் மூலம் கனவு நிறைவேறியது. எனக்கு அவர் உறுதுணையாக இருப்பார். என்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது,” என தெரிவித்திருந்தார். இதனை அடுத்து, நவ்நீத் - சாக்சி தம்பதிகளுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், திருமணம் முடிந்து ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில், தற்போது அவர் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று இருப்பதாக தெரிகிறது. அங்கு, கடலில் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்ட நிலையில், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
ஏற்கனவே நேற்று அவர் தனது கணவருடன் மாலத்தீவில் உள்ள சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.