திருமண மோதிரத்தை எந்த கையில் அணிய வேண்டும்? அதிக நன்மையை பெறலாம்

9 hours ago
ARTICLE AD BOX

திருமண நிகழ்வின் நிச்சயதார்த்தத்தின் போது அணியும் எந்த கையில் அணிய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

திருமணம் மற்றும் நிச்சயதார்த்த மோதிர விடயத்தில் அதிகமான குழப்பங்கள் எழுவதுண்டு. சிலர் பெண்கள் வலது கையில் தான் போட வேண்டும் என்றும் சிலர் இடது கையில் போட வேண்டும் என்று கூறுவார்கள்.

உண்மையில் திருமண மோதிரத்தினை எந்த கையில் அணிந்தால் அதிக நன்மைகளைப் பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

வலது கையில் மோதிரம்

பொதுவாக பெண்கள் திருமண மோதிரத்தினை இடது கையில் அணிவதை விட வலது கையில் அணிவது வேறு அர்தத்தினைக் கொண்டுள்ளது.

ரஷ்யா, கிரீஸ், போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், பெண்கள் பாரம்பரியமாக தங்கள் வலது கையில் தங்கள் திருமண மோதிரத்தை அணிகிறார்கள்.

இது அவர்களின் கணவர் மற்றும் திருமணம் மீதான அர்ப்பணிப்பைக் குறிப்பதாக கூறப்படுகின்றது.

காரணம் என்ன?

பெண்கள் வலது கையில் மோதிரம் அணிவதால், சுதந்திரம் மற்றும், தன்னம்பிக்கையைக் குறிக்கின்றது.

மேலும் வலது கையில் மோதிரம் அணிவதன் மூலம், பெண்கள் தங்கள் துணைக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம் என்று அர்த்தமாம்.

சில கலாச்சாரங்களில், வலது கையில் திருமண மோதிரம் அணிவதால் திருமணத்திற்கு பாதுகாப்பு, ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

வலது கையில் திருமண மோதிரத்தினை அணிவதால், எதிர்மறை சக்தியை விலக்கி தம்பதிகளுக்கு நன்மை ஏற்படுமாம்.

வலது கையில் மோதிரம் அணிவதன் மூலம், பெண்கள் தங்கள் உறவில் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருப்பார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
Read Entire Article