ARTICLE AD BOX

சென்னை,
மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் மார்ச் 27-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், 'எல்2 எம்புரான்' படத்தில் 'கேம் ஆப் திரோன்ஸ்' நடிகர் இணைந்துள்ளார்.
'கேம் ஆப் திரோன்ஸில்' பிரான் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜெரோம் பிளின். இவர் தற்போது மோகன்லால் நடித்துள்ள எல்.2.எம்புரான் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார்.
ஜெரோம் பிளினின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை தற்போது பிருத்விராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தில், போரிஸ் ஆலிவர் என்ற கதாபாத்திரத்தில் ஜெரோம் பிளின் நடித்திருக்கிறார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.