திருப்பூர்: மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

3 days ago
ARTICLE AD BOX
திருப்பூர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாமாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி மாலா (36 வயது). இவர்களுக்கு சுஜித்குமார் (11 வயது) என்ற மகன் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருண்குமார் இறந்துவிட்டார். இதனால் மாலா தனது மகனை அழைத்துக் கொண்டு திருப்பூர் மங்கலம் ரோடு கோழி பண்ணை அருகே உள்ள கே.டி.கே.தோட்டம் பகுதியில் குடியிருந்து பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மகனுக்கு உணவில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அவரும் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் இருவரும் வீட்டில் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாலாவின் உடல் நிலை மிகவும் மோசமானதால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைபலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். சுஜித் குமாருக்கு திருப்பூர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து மாலா எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Read Entire Article