திருப்பூரில் பெண் பயணியை காப்பாற்ற  அரசு பஸ்  டிரைவர், கண்டக்டர் எடுத்த சூப்பர் முடிவு

4 hours ago
ARTICLE AD BOX

திருப்பூரில் பெண் பயணியை காப்பாற்ற  அரசு பஸ்  டிரைவர், கண்டக்டர் எடுத்த சூப்பர் முடிவு

Tiruppur
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்தில் இருந்து சின்னக்கரை வழியாக திருப்பூர் பழைய பஸ் நிலையம் வரை செல்லும் அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. இந்த பேருந்தை ராசு கண்ணன் என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சக்திவேல் என்பவர் இருந்தார்.பஸ் திருப்பூரை நோக்கி பயணித்த போது அருள்புரம் தாண்டி சின்னகரை அருகே சென்ற போது, பயணம் செய்து பெண் பயணி மயங்கினார். அப்போது சற்றும் யோசிக்காத டிரைவர் , மற்றும் கண்டக்டர் ஆகியோர். உடனடியாக பஸ்ஸை ஆம்புலன்ஸ் போல் மாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பலர், தங்களால் முடிந்த பல்வேறு விஷயங்களை மக்களுக்காக செய்கிறார்கள். பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்ப்பது தொடங்கி, உரிய நேரத்தில் பயணிகளை சேர வேண்டிய இடத்தில் கொண்டு போய் சேர்ப்பது, பயணிகள் நடு இரவில் கஷ்டப்படும் போது, அவர்களை பேருந்து நிறுத்தம் என்று பார்க்காமல் கேட்கும் இடத்தில் இறக்கி விடுவது, சில நேரங்களில் இரவில் பேருந்து நிறுத்தம் அல்லாத பகுதிகளில் ஏறுவதற்கு கேட்பார்கள்.. அவர்களையும் நிறுத்தி ஏற்றி செல்வார்கள். அதேபோல் சில அரசு பேருந்து நடத்துனர்கள் கனிவாக நடந்து கொள்வார்கள்.. அந்த வகையில் திருப்பூர் அரசு பேருந்து நடத்துனர்கள் செய்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.

A super decision was taken by a government bus driver and conductor to save a female passenger in Tirupur

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு ஏராளமான அரசு டவுன் பஸ்கள் இயங்குகின்றன. குறிப்பாக பல்லடத்தில் இருந்து தண்ணீர் பந்தல் தாண்டி, சின்னக்கரை வழியாகவே பெரும்பாலான அரசு பேருந்துகள் திருப்பூர் பழைய பஸ் நிலையம் வரை செல்கின்றன. அப்படித்தான் பல்லடத்தில் இருந்து சின்னக்கரை வழியாக அரசு டவுன் பஸ் பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி புறப்பட்டது.

அந்த பஸ்சை டிரைவர் ராசு கண்ணன் ஓட்டினார். கண்டக்டராக சக்திவேல் என்பவர் பேருந்தில் இருந்தார். இந்த நிலையில் பஸ்சில் பயணம் செய்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பஸ் சின்னக்கரை அருகே சென்றபோது அந்தப் பயணி மயக்கமடைந்தார். இது குறித்து அறிந்ததும் கண்டக்டர் சக்திவேல், 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தார். அவர்கள் வேறு ஒரு நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டு இருப்பதாகவும் வருவதற்கு தாமதமாகும் என தெரிவித்தார்களாம்.

இதையடுத்து பல்லடம் கிளை மேலாளர் செந்தில்குமாரை தொடர்பு கொண்ட சக்திவேல் நடந்த சம்பவங்களை கூறினார். இதற்கு பயணிகளை மாற்று பஸ்ஸில் அனுப்பி விட்டு மயக்கம் அடைந்த பெண் பயணியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பஸ்சிலேயே அழைத்துச் செல்லுமாறு கிளை மேலாளர் அறிவுறுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் வீரபாண்டி பிரிவில் இறக்கிவிடப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து மயக்கமடைந்த அந்த பயணியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அரசு பஸ்சிலேயே கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். பயணி உடல் நலக்குறைவால் மயக்கமடைந்ததும் உடனடியாக செயல்பட்டு, அரசு பஸ்சையே ஆம்புலன்சாக மாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர், கிளை மேலாளர் ஆகியோரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

More From
Prev
Next
English summary
Government bus turns into ambulance to save female passenger in Tirupur: A government town bus was travelling from Palladam bus stand to Tirupur old bus stand via Chinnakarai. While the bus was travelling towards Tirupur, it crossed Arulpuram and went near Chinnakarai, when the government bus driver and conductor made a super decision to save the female passenger.
Read Entire Article