திருப்புத்தூரில் குழாய் பழுதால் வீணாகும் குடிநீர்: சரி செய்ய கோரிக்கை

3 hours ago
ARTICLE AD BOX


திருப்புத்தூர்: திருப்புத்தூரில் வனத்துறை அலுவலகம் அருகில் உள்ள காவிரி குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சியில் இருந்து ராமநாதபுரத்துக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் வழியாக ராமநாதபுரத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகிக்க குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தென்மாபட்டு, ஆத்தங்கரைப்பட்டி, பட்டமங்கலம், செம்பனூர், கல்லல் வழியாக ராமநாதபுரம் வரை பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி குடிநீர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதற்காக பணிகள் நடைபெற்றன.

இதில் ஆங்காங்கே தொட்டி (ஜம்பர்) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏதேனும் அடைப்பு, நீர் வெளியேறுதல், நீர் குறைவாக வருதல் உள்ளிட்டவை கண்டறியப்படும். இந்நிலையில் திருப்புத்தூரில் இருந்து சிவகங்கை செல்லும் ரோட்டில் வனத்துறை அலுவலகம் அருகே அமைந்துள்ள காவிரிக்குடிநீர் இரும்பு குழாயில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டு, அதிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அதனை பார்வையிட்டு, குழாயை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்புத்தூரில் குழாய் பழுதால் வீணாகும் குடிநீர்: சரி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article