ARTICLE AD BOX
கோவை, பெங்களூரில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவை - திருப்பதி இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (எண் 22616) ஐசிஎஃப் பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வியாழக்கிழமை (மாா்ச் 20) முதல் எல்எச்பி என்னும் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.
பெங்களூரில் இருந்து திருப்பதிக்கு காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக அதிவிரைவு ரயில் (எண் 22617) இயக்கப்படுகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) முதல் ஐசிஎஃப் பெட்டிகளுக்கு பதிலாக எல்எச்பி பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.