ARTICLE AD BOX
திருப்பதி திருமலையில், தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
திருப்பதியில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக சிறப்பு தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ப, அறைகள் இல்லாமல் தவிக்காமல் இருக்க தேவஸ்தானம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருப்பதி திருமலையில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 7 ஆயிரத்து 500 தங்கும் அறைகள் உள்ளன. இதுதவிர லாக்கர்கள், குளியல் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பெரிய மண்டபங்களும் உள்ளன. அவற்றில் 50 ரூபாய் வாடகை அறைகள் தவிர மற்ற அறைகளை பரிந்துரைக் கடிதங்கள் மூலமாகவும், ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் தேவஸ்தான நிர்வாகம் ஒதுக்கீடு செய்து வருகிறது.
இந்நிலையில், சிலர் தரிசனம் செய்யாமல் சுற்றுலா வந்து செல்வதுபோல அறைகளை வாடகைக்கு எடுப்பதால், அடுத்துவரும் பக்தர்களுக்கு அறைகளை ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 50 ரூபாய் கட்டணம் கொண்ட சாதாரண அறைகளைத் தவிர மற்ற அறைகள் தரிசன டிக்கெட் கொண்டுவரும் பக்தர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யும் தேவஸ்தான நிர்வாகம்,
தரிசனம் முடிந்ததும் அறைகளை காலி செய்து கொடுக்க பக்தர்களை அறிவுறுத்தியுள்ளது.