ஜோக்ஸ்: ஓடினால் சுகர் குறையுமே..!

3 hours ago
ARTICLE AD BOX

அடிக்கடி போர் வரவேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் மன்னா!

ஏன் வைத்தியரே? ஓடினால் உங்கள் சுகர் குறையுமே!

*******************************

கபாலி! நீ தலைவர் வீட்டுல திருட மாட்டியா? ஏன்?

திருடன் வீட்டுலேயே திருட மாட்டேன்னு சபதம் எடுத்திருக்கேன் சார்!

*******************************

போர் ஓலை வந்ததும் கால்கள் துடிக்கின்றன அமைச்சரே!

போர்க்களத்திலிருந்து தலை தெறிக்க ஓடி வரத்தானே மன்னா?

*******************************

நன்னடத்தை காரணமாகவா நம்ம தலைவரை ஜெயில்ல இருந்து சீக்கிரமா ரிலீஸ் பண்ணினாங்க?

ஜெயில்ல இருக்கறவங்களோட நடத்தை கெட்டுப் போயிடுமேன்னு பயந்துக்கிட்டு!

*******************************

எனக்கு கோட்டையில இருக்க யோகம் வந்தாச்சுன்னு என் கையைப் பார்த்து ஜோசியர் சொன்னாரய்யா!

பாளையங்கோட்டையைப் பத்தி சொல்லியிருப்பாரு தலைவரே!

*******************************

வீடு கட்ட லோன் வாங்கினீங்களே, கட்டிட்டீங்களா?

kalki jokes
kalki jokes

லோனை கேட்குறீங்களா, வீட்டைக் கேட்குறீங்களா?

*******************************

தலைவருக்கு டாக்டர் பட்டம் தந்ததுல இருந்து ஆளே மாறிட்டார்!

எப்படிச் சொல்றே?

தன்னைப் பார்க்க வர்றவங்களுக்கு சத்து மாத்திரை கொடுக்கிறாரே!

*******************************

தலைவரே! ஏன் உங்களுக்கு 60ம் கல்யாணம் நடத்த வேண்டாம்னு சொல்றீங்க?

இளைஞரணிப் பதவியை தக்க வச்சுக்க முடியாதேன்னு தான்யா!

*******************************

என் வீட்டுக்காரருக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர். வீட்டைப் பூட்டிட்டு போய் திரும்பவும் வந்து ஒன்னுக்கு ரெண்டு தடவை பார்த்துட்டு வருவாரு!

அது நல்லதுதானம்மா!

நான் சொன்னது பக்கத்து வீட்டோட பூட்டை!

*******************************

"மகத்தான வெற்றி" ன்னு சொல்றீங்களே, படம் தியேட்டருக்கு வந்தே இரண்டு நாள்தானே ஆகுது?

நான் படத்தோட பேரைச் சொன்னேன்!

Read Entire Article