நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!

3 hours ago
ARTICLE AD BOX

கோயம்புத்தூர் கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மட்டும் நடைபெறும். விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளின் விவரம் இங்கே.

School Holiday

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை மற்றும் கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

School Holidays

ஆனால் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை காலை வழக்கம்போல் நடைபெறும் என்றும் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளூர் விடுமுறை பொருந்தும் என தெரிவித்துள்ளார். 

school holiday

விடுமுறை அறிவிக்கப்பட்ட 24 பள்ளிகளின் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. CCMA மகளிர் மேல்நிலைப் பள்ளி, வீராசாமி முதலியார் உயர்நிலைப்பள்ளி, புனித மைக்கேல்ஸ் மேல்நிலைப் பள்ளி, சௌடேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, SBOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புனித ஃப்ரான்ஸிஸ் மகளிர் உயர்நிலைப் பள்ளி, புனித ஜொசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,  புனித மெரீஸ் மேல்நிலைப் பள்ளி, புனித மைக்கேல்ஸ் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, மில்டன் மெட்ரிக் பள்ளி.

School holiday

அதேபோல் ஷ்ருஸ்டி வித்யாலயா, வாசவி வித்யாலயா, மதர்லாண்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, T.E.LC நடுநிலைப் பள்ளி, ICC நடுநிலைப் பள்ளி, நல்லாயன் தொடக்கப் பள்ளி, மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒப்பனக்காரர் வீதி, ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி கோவை நகரம் VH ரோடு,  CSI ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மன்பல் உலும் தொடக்கப் பள்ளி, மன்பல் உலும் மேல்நிலைப் பள்ளி, பிரசென்டேசன் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளி, மாரன்னகவுண்டர் உயர்நிலைப் பள்ளிகள் அடங்கும். 

Read Entire Article