ARTICLE AD BOX
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் ஆண், பெண் என இரு பாலினத்தவர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்தநிலையில், பெண்கள் விளையாட்டில் திருநங்கைகள் பங்கேற்பதை தடை செய்யும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இது குறித்து டிரம்ப் கூறியதாவது:-
இந்த நிர்வாக உத்தரவின் மூலம் பெண்கள் விளையாட்டு மீதான போர் முடிந்துவிட்டது. பெண்களை ஆண்கள் வெல்ல அனுமதிக்க மாட்டோம். பெண் விளையாட்டு பெருமைமிக்க பாரம்பரியத்தை நாங்கள் பாதுகாப்போம். ஆண்கள் எங்கள் பெண்களை அடிக்க, காயப்படுத்த, ஏமாற்ற அனுமதிக்கமாட்டோம். இனி பெண்கள் விளையாட்டு பெண்களுக்கு மட்டுமே என்றார்.
பிறப்பால் ஆணாக இருந்து திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகளாக பங்கேற்கத் தடை செய்யும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளது அந்நட்டு திருநங்கைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.