ARTICLE AD BOX

திருச்சி, திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக் மகன் முகமது அலி (37). இவர், ஒரு பள்ளியின் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். அந்தவகையில் மாணவிகளை வேனில் அழைத்துச் செல்லும் போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகியுள்ளார். மேலும், திருமணமான இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். மேலும், ஜமாத் பெரியவர்களை வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முகமது அலியை கண்டித்ததோடு மாணவியிடம் பழகுவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளனர். ஆனால், முகமதுஅலி தொடர்ந்து அந்த மாணவியிடம் பழகி வந்ததால் மாணவியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார், முகமது அலி மீது வழக்கு பதிந்து தலைமறைவான வலைவீசி தேடி வருகின்றனர்.
The post திருச்சியில் பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகிய வேன் டிரைவருக்கு வலை…! appeared first on Rockfort Times.