ARTICLE AD BOX
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, மும்பை ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் மட்டுமே இயக்கி வந்தது. இதனால் விடுமுறை நாட்களில் அதிக அளவிலான கட்டணத்தை செலுத்தி பயணிகள் பயணிக்கும் நிலை இருந்து வந்தது. இந்தநிலையில் வருகிற மார்ச் 23-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய சேவையை வழங்க உள்ளது. இந்த விமானம் மாலை 6-45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இரவு 7-45 மணிக்கு வந்தடையும். இங்கிருந்து இரவு 8-15 மணிக்கு புறப்பட்டு இரவு 9-15 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே இண்டிகோ நிறுவனம் திருச்சி சென்னைக்கு 5 சேவைகளை வழங்கி வரும் நிலையில் ஆறாவது சேவையாக இது அமையும்.
The post திருச்சியில் இருந்து சென்னைக்கு மார்ச் 23-ம் தேதி முதல் புதிய விமான சேவை…! appeared first on Rockfort Times.