ARTICLE AD BOX
சென்னை கிழக்கு கடற்கரை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை திமுக கொடி பொருத்திய சொகுசு காரில் துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இரண்டுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சென்று கொண்டிருந்த காரை ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடு ரோட்டில் இடைமறித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்து மீண்டும் மீண்டும் இடைமறித்த வீடியோ வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பிரிவுகளில் இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை வலை வீசி தேடி வந்த நிலையில் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
இப்படியான நிலையில் நேற்று அமைச்சர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் ECR விவகாரத்தில் காரில் திமுகவின் கொடி கட்டப்பட்டிருந்ததே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆர் எஸ் பாரதி, திமுகவை பழிவாங்குவதற்கு வேண்டுமென்றே இப்படி ஒரு செயலில் ஈடுபடுகின்றனர். திமுக கொடியை கட்டிக்கொண்டு திட்டமிட்டு ஒரு சதி நடக்கிறது. திமுக ஆட்சியில் ஒன்றும் செய்ய முடியவில்லை. எட்டு முறை மோடி வந்தோம் பாராளுமன்றத்தில் அனைவரையும் நம்ம தளபதி ஸ்டாலின் அலற விட்டு விட்டார். தமிழ்நாட்டில் போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் கூடுகிறது. முதல்வரை அனைவரும் அப்பா அப்பா என்று அழைப்பதை இப்போதுதான் நானே தமிழக அரசியலில் பார்க்கிறேன் என ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.