ARTICLE AD BOX
கேரள மாநிலத்தில் உள்ள சென்னிதலா பகுதியில் ராகவன்- பாரதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு விஜயன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் விஜயன் முழு சொத்தையும் தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு அடிக்கடி பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். அதற்கு ராகவனும், பாரதியும் சொத்துக்களை பிற்காலத்தில் எழுதி தருவதாக கூறினர். அதை ஏற்க மறுத்து விஜயன் தனது பெற்றோரை அடித்து சித்திரவதை செய்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு ராகவனும், பாரதியும் தங்கியிருந்த வீட்டில் இருந்து புகை வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் ராகவனும், பாரதியும் பரிதாபமாக உயிரிழந்தனர். வழக்கமாக வீட்டில் இருக்கும் விஜயன் சம்பவம் நடந்தபோது காணாமல் போய்விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதனால் விஜயன் பெற்றோரை அடித்து கொலை செய்து வீட்டிற்கு தீ வைத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விஜயனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.