திமுக உடன் சமரசம்! சீமான் போட்ட திட்டம்! உண்மையை உடைக்கும் செந்தில்வேல்!

16 hours ago
ARTICLE AD BOX

நடிகை விஜயலட்சுமி பாலியல் புகாரில் இருந்து தப்பிக்க திமுகவுடன் சமாதானம் செய்துகொள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முயற்சித்ததாக பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு முதலமைச்சர் சம்மதிக்காததால் சீமான், பாஜகவுடன் மறைமுக கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பாக சீமானின் நடவடிக்கைகளின் பின்புலத்தை விளக்கி பத்திரிகையாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:- இன்றைக்கு விஜயலட்சுமியை பாலியல் தொழிலாளி என்று சொல்லுகிறார் சீமான். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கிறீர்கள். அப்போது இருவரும் ஒன்றாக வாழ்ந்து இருக்கிறீர்கள். அதன் பிறகு திருமணம் செய்ய முடியாமல் போகிறது. அதற்கு உங்கள் தனிப்பட்ட சூழல் காரணமாக இருக்கலாம். அதை பெண் தரப்பு ஏற்க மறுக்கிறது. அவர்கள் புகார் தெரிவிக்கிறார். இப்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதை சட்ட ரீதியாக எதிர்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு சீமான் நகர்ந்திருக்க வேண்டும். மாறாக ஒவ்வொரு நாளும் அவர் எடுக்கிற வாந்தி அருவருக்கத்தக்க வகையில் உள்ளது.

ஒரு பாலியல் தொழிலாளியைத்தான் நீங்கள் பொண்டாட்டி என்று சொன்னீர்களா? ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது நீங்கள் விஜயலட்சுமியுடன் இருந்ததற்கான ஆதாரங்கள் எல்லாம் உள்ளன. நானே பிச்சை எடுத்து வாழ்கிறேன் என்கிறீர்கள். ஈழத் தமிழர்கள் கடும் இன்னலுக்கு மத்தியில் வெளிநாட்டில் இருந்து வியர்வை சிந்தி அனுப்பக்கூடிய பணத்தை வைத்துக்கொண்டு நீங்கள் பாலியல் தொழிலாளியுடன் தான் கூத்து அடித்தீர்களா? இதன் பெயர்தான் தமிழ் தேசியமா? இதைத்தான் பிரபாகரன் சொல்லித்தந்தாரா? உங்கள் தவறுகளை மறைக்க பெருந்தலைவர்களை இழுக்காதீர்கள். ரூ.50 ஆயிரம் கொடுத்தேன் என்கிறீர்கள். யார் வீட்டு காசு அது?

நடிகை விஜயலட்சுமி எழுதி கொடுத்த வாபஸ் மனு செல்லுபடி ஆகுமா? சட்ட வல்லுனர்களுடன்போலீசார் ஆலோசனை!

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை ஒருவர் அளித்த புகாரால் நீதிமன்றத்திற்கு வந்து விட்டது. இதில் தமிழ்நாடு அரசுக்கோ, காவல் துறைக்கோ தொடர்பு இல்லை. அரசு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுகிறது அவ்வளவுதான். நீங்கள் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அங்கு பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மைக்கை நீட்டும் இடத்தில் எல்லாம் விஜயலட்சுமி மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதால், அவர்களும் உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்துகிறார். உங்கள் தரப்பு நியாயத்தை சொல்கிறேன் என்று ஒட்டுமொத்த பெண்களை எல்லாம் கொச்சைப் படுத்துவது. இதன் பெயர்தான் தமிழ் தேசியமா? உடனே திராவிடம் சதி செய்கிறது என்கிறார். திராவிடத்தை கேட்டுத்தான் நீங்கள் விஜயலட்சுமியுடன் குடும்பம் நடத்தினீர்களா? அவருக்கு பணம் கொடுத்தீர்களா? அவருடன் சமாதானம் பேச தூது விட்டீர்களா?

சீமான் எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை இல்லையா? என்று கேட்கிறார். அது நியாயமான கேள்விதான். அதில் நான் உடன்படுகிறேன். அவர்கள் குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள் என்று கேட்பதில் உளப்பூர்வமாக உடன்படுகிறேன். ஒரு புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைக்கே உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே? எந்த பெண்ணும் பெரியார் மீது புகார் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் நீங்கள் பெரியாரை எப்படி கொச்சைப்படுத்த முடிந்தது? முழுக்க முழுக்க பெண்களின் முன்னேற்றத்திற்காக வாழ்ந்த ஒரு தலைவரை அபாண்டமாக பழி போட்டீர்களே? அன்றைக்கு உங்களுக்கு இனித்ததா? இதே மனநிலை தான விஜயலட்சுமிக்கு இருந்திருக்கும். நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பின்னர் நீங்கள் ஏன் விஜயலட்சுமியிடம் சமாதானம் பேசினீர்கள். மதுரை செல்வத்தின் மூலம் சமரச பேச்சுவார்த்த நடத்தினீர்கள். அது தோல்வியில் முடியவும், அந்த கோபத்தில் விஜயலட்சுமி மீது அபாண்டமாக பழியை தூக்கிப்போடுகிறீர்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதுதான் பிரச்சினை வருகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் சீமான், வேறு வழியின்றி ஜெயலலிதாவின் காலில் சென்று விழுந்தார். 2016லும் அதிமுக ஆட்சியே தொடருகிறது. 2021-ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வருகிறது. அதன் பிறகுதான் வளசரவாக்கத்தில் நீண்ட நாட்களாக வாடகை கொடுக்காமல் வீட்டின் உரிமையாளரை மிரட்டி வந்த சீமான், அந்த வீட்டை காலிசெய்துவிட்டு வருகிறார். மத்தியில் பாஜக இருந்ததால் வேறு வழியின்றி திமுகவுடன் சமரசம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வீட்டில் நேரில் சென்று சந்தித்தார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது என்று பாராட்டு பத்திரம் வாசித்தார். அப்போதுதான் ஒன்று சொன்னார். திராவிடத்திற்கும் எங்களுக்கும் நடப்பது பங்காளிச் சண்டை. எங்களுடைய பிரதான எதிரி பாஜகதான் என்று சொன்னார். அதெல்லாம் எதற்கு என்றால், வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகத்தான். ஆனால் ஸ்டாலின் தெளிவாக இருந்தார். எப்போதும் அவர் சீமானை பழிவாங்கும் போக்கிலும் இல்லை. இவரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் இல்லை.

"மத்திய நிதியமைச்சர் ஆணவமாகப் பதில் கூறுகிறார்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்நிலையில்தான், 2024ல் மத்தியில் பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. மாநிலத்திலும் சீமானுக்கு எதிரான ஆட்சி. மத்தியிலும் பாஜக ஆட்சி. அவர்களும் என்ஐஏ சோதனைவிட்டார்கள். அப்போது ஸ்டாலின் சமாதானத்திற்கு தயாராக இல்லை என்பதால்,  மோடியின் காலில் விழுந்துவிடலாம் என்று சீமான் முடிவு செய்தார். நேரடியாக ரஜினிகாந்தை சென்று சந்தித்து வானளாவ புகழ்ந்து, சங்கி என்றால் நண்பன் என்று கூறி, ஹெச்.ராஜாவை அறிஞர் என சொல்லி பாஜகவுடன் சமரசமாக போனார். அதன் பின்னர்தான் அண்ணாமலை சீமானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். பாஜகவுடன் கூட்டணி என்றால்,  மோடியை வெளிப்படையாக புகழ முடியாது. அதனால் மோடிக்கு சிக்கல் யார் என்றால் பெரியார். அப்போது மோடியிடம் ஒரு டீல் போடுகிறார். பெரியாரை நான் காலி பண்ணி தருகிறேன். நீங்கள் வழக்கை பார்த்துக்கொள்ளுங்கள் என்று டீல் போடுகிறார். அந்த டீல்தான் பெரியாரை கன்னாபின்னா என்று சீமான் பேசுகிறார். ஹெச்.ராஜா இன்று பேசுகிறார். சீமான் எவ்வளவு நல்ல மனிதன். அவரை ஏன் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று சொல்கிறார். இன்று வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்திற்கு சீமான் செல்கிறார்.

மாநில அரசு தன்னுடன் உடன்பாட்டிற்கு வரவில்லை என்பதால், மத்திய அரசுடன் உடன்பாட்டிற்கு சென்றுவிடுவோம் என்று சீமான் பெரியாரை திட்டினார். இதனிடையே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்க தொடங்கிய உடன் பயந்துவிட்டார். பயத்தில் தினசரி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் உளற தொடங்கியுள்ளார். அதுதான் இன்று விஜயலட்சுமியை கண்ணியக் குறைவாக விமர்சனத்தை வைக்க முடிந்துள்ளது.

ரவீந்திரன் துரைசாமி வெளிப்படையாக சொல்கிறார், நிதிஷ்குமார் மூலம் மோடி சீமானை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவார் எனறு. அப்படி என்றால் பாஜக, நாதக கூட்டணி என்று வெளிப்படையாக ரவீந்திரன் துரைசாமி பேசுகிறார். மற்றவர்களுக்கு எல்லாம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்றால் சீமானுக்கு இந்த வழக்கு. இதை வைத்து மத்திய அரசு சீமானை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைக்கிறதா? என்கிற கேள்வியும் எழுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Read Entire Article