ARTICLE AD BOX
சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 5 கி.மீ ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று (மார்ச்.4) மதியம் 2.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்கானிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது நிகழ்ந்துள்ளதைப் போன்ற ஆழமற்ற நிலநடுக்கங்கள், பூமியின் மேற்பரப்புக்கு அருகில் அதிக ஆற்றலை வெளியிடுவதினால் ஆழமானவற்றை விடவும் ஆபத்தானவை எனக் கூறப்படுகிறது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் பின் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!
EQ of M: 4.2, On: 04/03/2025 14:44:28 IST, Lat: 28.28 N, Long: 87.56 E, Depth: 5 Km, Location: Tibet.
Our Website and App are down due to maintenance. We will be back soon, please bear with us. @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/QiFZVFLzqs
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவல்களும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
முன்னதாக, கடந்த பிப்.27 அன்று திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 70 கி.மீ ஆழத்தில் 4.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் இணையும் பிளவுக்கோட்டில் திபெத் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் நிலப்பரப்பு அமைந்துள்ளதினால் அங்கு எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் எனும் அபாயமுள்ளது.