ARTICLE AD BOX
பழங்களில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் தாது உப்புகள் போன்ற பல வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், தினமும் ஏதேனும் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான நீர்ச்சத்தினை அளித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
பழங்களை சாப்பிடும் போது நாம் செய்யும் சிறு தவறினால் ஊட்டச்சத்துக்களை இழப்பதோடு பக்க விளைவுகளையும் அனுபவிக்க நேரிடும்.
பழங்களை சாப்பிடும் போது நாம் செய்யும் சில தவறுகள் :
இரவு நேரங்களில் பழங்கள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இரவு நேரங்களில் பழங்கள் சாப்பிடுவதால் தூக்கமின்மை மற்றும் அமிலத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: மக்கானா ஆரோக்கியமானது மட்டுமல்ல.. ஆபத்தானதும் கூட.. உஷார்.!
பெரும்பாலும், பழங்களை தோல் நீக்கி சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால், தோலில் தான் அதிக வைட்டமின்கள் உள்ளது. இருப்பினும் அனைத்து பழங்களையும் தோலோடு சாப்பிட முடியாது. ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களை தோல் நீக்காமல் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
பழங்களில் போதிய அளவு நீர்ச்சத்து இருக்கும். ஆகையால், பழங்கள் சாப்பிட்ட பின் உடனே தண்ணீர் குடிக்க கூடாது. இவ்வாறு, பழங்கள் சாப்பிட்ட பின் உடனே தண்ணீர் குடித்தால் செரிமானத்தின் சமநிலைய பாதிக்கும்.
நம்மில் பலரும் பழங்களை வெட்டி குளிரசாதனைப் பெட்டியில் வைத்து பிறகு சாப்பிடுகிறோம். இவ்வாறு, செய்வது நம் உடல் நலத்திற்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகையால், பழங்களை நறுக்கிய உடனே சாப்பிட்டு விட வேண்டும்.
பழங்களை மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட கூடாது. இதனால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக, சாட் மசாலா, மிளகாய் தூள் போன்றவற்றை பழங்களில் சேர்த்து சாப்பிட கூடாது. மேலும், எதிர்வினை பழங்களை சேர்த்து சாப்பிட்டால் அமிலத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: பெண்களே.. உஷார்.. பிரா பயன்படுத்தினால் இப்படி எல்லாம் நடக்குமா.?!