ARTICLE AD BOX
ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூக்கம் அவசியம், உங்களுக்கு உறக்கம் வரவில்லை என்றால் தினமும் இதை மட்டும் பண்ணுங்க 7 மணி நேரம் தூக்கம் உறுதி என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரை செய்துள்ளார்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளம் நிம்மதியான உறக்கம். பலரும் பணம், பொருள், வசதி எல்லாம் இருந்தும் நிம்மதியான உறக்கம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவருக்கும் 7 மணி நேரம் நிம்மதியான உறக்கம் தேவை. ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கினால் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
பலரும் உறக்கம் வராமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் தினமும் இதை மட்டும் பண்ணுங்க 7 மணி நேரம் தூக்கம் உறுதி என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
மருத்துவர் சிவராமன் கூறுவதை அப்படியே இங்கே தருகிறோம்: “உறக்கத்தை இன்றைக்கு நிறைய தொலைக்கிறோம். ஒவ்வொருவருக்கும் 6-ல் இருந்து 7 மணி நேர உறக்கம் மிகமிக அவசியம். அதற்காக எல்லாரும் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டு தூங்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஒருவேளை உறக்கம் சரியாக வரவில்லை என்றால் மாலை நேரத்தில் நடைபயிற்சியை வைத்துக்கொள்ளுங்கள். மாலை நேரத்தில் 1 மணி நேரம் நடந்து, அதற்குப் பிறகு, நல்ல வெந்நீரில் குளித்து அதற்கு பிறகு, இரவு ஆவியில் வெந்த எளிய உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். எளிய ஆவியில் வெந்த உணவுகளை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இட்லியை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகள் இட்லி பக்கம் போய்விடாதீர்கள்.”
என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.