ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/OFASWrPhgAmeg0XzklmV.jpg)
உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை வற்புறுத்தி செய்யும்போது அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. உடற்பயிற்சிக்கும் இது பொருந்தும். அதனால் தான் உடற்பயிற்சியில் உங்களுக்கு பிடித்த உடற்பயிற்சியை அடிக்கடி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வது என்பதை ஒரு ஜாலியான அனுபவமாக இருக்க வேண்டுமே தவிர கஷ்டப்பட்டு வற்புறுத்தி வருவதாக இருக்கக்கூடாது. நீங்கள் யோகாசனம், நடைபயிற்சி, எடைதூக்கும் பயிற்சி ஆகிய எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும். இவ்வாறு உங்களுக்கு பிடித்த விஷயத்தை தொடர்ச்சியாக செய்யும்போது அதுவே ஒரு பழக்கமாக மாறிவிடும்.
/indian-express-tamil/media/media_files/VVX51O6OIC4hGB60NqiG.jpg)
உடற்பயிற்சி செய்யும் போதும் பொறுப்புணர்வு என்பது மிகவும் அவசியமானதாகும். உடற்பயிற்சியில் பொறுப்புணர்வு வருவதற்கு பிடித்த நபர்களுடன் நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். இதனால் மகிழ்ச்சியோடு, அதே சமயத்தில் விளையாட்டுத்தனமானதாக உடற்பயிற்சி மாறிவிடும். மேலும் சில நாட்களில் நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று நினைத்தாலும் கூட உங்களது பார்ட்னர் உங்களை கட்டாயப்படுத்தி உடற்பயிற்சி செய்ய வைப்பார். இதுபோல ஒருவருக்கொருவர் உந்துதலாக இருந்து கட்டுகோப்பான ஆரோக்கியமான உடலை பெற இயலும்.
/indian-express-tamil/media/media_files/QT5RbtbrNw7KBuApF7Gx.jpg)
வாரத்தின் முதல் நாளான திங்கள் அன்று உடற்பயிற்சி செய்வதை எப்போதும் தவற விடக்கூடாது என்று வல்லுநர்கள் கூறுவார்கள். ஏனெனில் வாரத்தில் முதல் நாளில் நீங்கள் செய்யும் உடற்பயிற்சியானது அடுத்து வரும் நாட்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும். மேலும் இதனால் உங்களது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மிகப்பெரிய குறிக்கோள்கள் வைக்காமல் இது போன்ற சிறு சிறு குறிக்கோள்களை வைத்து அவற்றை தெளிவாக செய்து முடிப்பதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த கட்டுக்கோப்பான உடற்கட்டை நீங்கள் பெற முடியும்.
/indian-express-tamil/media/media_files/ca26fjA8DyJBvJ5S1Mjt.jpg)
உடற்பயிற்சி செய்வது எந்த அளவிற்கு முக்கியமானதோ அது போலவே நமது தசைகளுக்கு ஓய்வு கொடுப்பதும் மிகவும் அவசியமானதாகும். உடற்பயிற்சிக்கென நாட்களை ஒதுக்குவது போல் ஓய்வு எடுப்பதற்கு என நாட்களை ஒதுக்க வேண்டும். அந்த நாட்களில் உடலை வருத்தி கடினமான வேலைகளை செய்யாமல் முழுவதும் ரிலாக்ஸ் மோடிற்கு மாறிவிடவும்.
/indian-express-tamil/media/media_files/mmFTn7qAm6p3pTCWf9Tf.jpg)
எப்போதும் ஒரே விதமான உடற்பயிற்சி செய்யாமல் புதிய விதமான விதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது ஒரு வித புத்துணர்ச்சியை கொடுக்கும். உதாரணத்திற்கு கார்டியோ, நடைப்பயிற்சி, ஜூம்பா, யோகா போன்ற விதவிதமான பயிற்சிகளை கலந்து செய்யும்போது நமக்கே ஒரு விதப் புத்துணர்ச்சி கிடைப்பதை நம்மால் உணர முடியும். மேலும் நீண்ட கால அடிப்படையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ள இது உதவும்.
/indian-express-tamil/media/media_files/i3zp3kFjiSIbSZcWwhgZ.jpg)
ஃபிட்னஸ் பிரியர்களின் குழுவில் உங்களை இணைத்துக் கொள்வது மிகவும் உபயோகமாக இருக்கும். குழுவாக சேர்ந்து இது போன்ற பயிற்சிகளை செய்யும்போது இது உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். மேலும் நீங்கள் ஊக்கமில்லாமல் இருந்தாலும் சுற்றி உள்ளவர்கள் உங்களை ஊக்கப்படுத்தி உங்களது எல்லைகளை நீங்களே உடைக்க உதவுவார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/friends-workout-759.jpg)
நீங்கள் எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்கிறீர்கள், எந்த அளவிற்கு கடினமாக செய்கிறீர்கள் என்பதையும், அதனால் ஏற்படும் முன்னேற்றத்தையும் உன்னிப்பாக கவனித்து வர வேண்டும். இதற்கு பல்வேறுவித ஃபிட்னஸ் செயலிகள் மற்றும் பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களும் சந்தையில் உள்ளன. மேலும் ஒவ்வொரு முறையும் உங்களது சொந்த சாதனைகளை நீங்களே முறியடிக்க முயற்சிக்க வேண்டும்.