திடீர் நெஞ்சுவலி காரணமாக ஏஆர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி

17 hours ago
ARTICLE AD BOX

இந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக கருதப்படுபவர் ஏஆர் ரஹ்மான். இவருக்கு இப்போது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவசர சிகிச்சை பிரிவில் ரஹ்மானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவர் குழு இவருடைய உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ரசிகர்கள் உட்பட திரைப்பிரபலங்களும் இவர் சீக்கிரமாக குணமாகி வர வேண்டுமென வேண்டி வருகின்றனர். ரோஜா படத்தின் மூலம் முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ரஹ்மான். முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை தட்டிச் சென்றார்.

முதல் படத்தின் வெற்றி ரஹ்மானை இந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்தது. தொடர்ந்து தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழிகளிலும் முத்திரை பதித்து வருகிறார் ரஹ்மான். சமீபத்தில் தக் லைஃப் படத்திற்கும் ஜெயம் ரவியின் ஜீனி படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளருக்கான முதல் ஆஸ்கார் விருதை வென்ற பெருமையையும் சேர்த்தார் ரஹ்மான்.

இவருக்கு இரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். சமீபத்தில்தான் ரஹ்மான் அவருடைய மனைவியை பிரிந்தார். இந்த செய்தியும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் ரஹ்மானின் மனைவிக்கும் திடீர் உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இப்போது ரஹ்மானுக்கும் நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து ரஹ்மான் குறித்து இந்த மாதிரி செய்திகள் வந்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அனைவரும் இறைவனை வேண்டி வருகின்றனர். எத்தனையோ புகழுக்கு சொந்தக்காரர் ரஹ்மான். ஆனால் எந்தவொரு பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருப்பார். அதுதான் அவருக்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்தது. 

Read Entire Article