ARTICLE AD BOX
திருவாரூரில் இருந்து காரைக்கால் செல்லும் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இப்பணிக்காக திருவாரூரில் இருந்து ஜல்லி, கற்கள் போன்றவை ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், இன்று காலை திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜல்லி, கற்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டது.
12 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில், திருவாரூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரயில் எஞ்சின் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. சிறிது தூரத்திற்கு தண்டவாளத்தில் இருந்த ஜல்லி, கற்களை சறுக்கிக் கொண்டு சென்ற ரயில், திடீரென தானாகவே நின்றது. இதையடுத்து, ரயில் ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனே ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர்.
தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய எஞ்சின் பெட்டியை விடுத்து, மீதமுள்ள பெட்டிகளை மாற்று எஞ்சின் மூலம் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தற்போது, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட எஞ்சின் பெட்டியை மீட்பதற்கான பணி நடைபெற்று வருவதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Read More : மேலும் ஒரு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பால் மாணவ, மாணவிகள் குஷி..!!
The post திடீரென தடம் புரண்ட ரயில்..!! ஜல்லி கற்களை உரசி சென்ற என்ஜின்..!! திருவாரூரில் பரபரப்பு..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.