மொறு மொறு பிஸ்கட்டுகள் செய்யலாமா?

3 hours ago
ARTICLE AD BOX

குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்ததும் ஏதேனும் ஸ்நாக்ஸ் வகைகளை விரும்புவார்கள். அதிலும் உடனடியாக சாப்பிடுவதற்கு ஏற்ற பிஸ்கட்டுகளை கடைகளில் வாங்கித் தயாராக வைத்து தருவோம். அந்த பிஸ்கட்டுகளை வீட்டிலேயே நாம் செய்து தந்தால் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் சுவையாகவும் இருக்கும். இதோ குழந்தைகளுக்கான பிஸ்கட்  செய்முறைகள் இங்கே ..

வெண்ணெய் பிஸ்கட்ஸ்
தேவை:

மைதா 130 கிராம்
சர்க்கரை-  55 கிராம்
டால்டா அல்லது வெண்ணெய் - 80 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:
மைதா மாவை உப்பு சேர்த்து  சலித்துக்கொள்ளவும். டால்டாவையும் மைதாவையும் மென்மையாக பிசைந்து பிறகு அதிலேயே சர்க்கரையை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பூரிகட்டை கொண்டு ஒரு அங்குல கனத்திற்கு இட்டு சிறு சதுரங்களாக வெட்டி பிஸ்கட் டிரேயில் இடைவெளி விட்டு வைத்து 275 டிகிரி F  வெப்பம் கொண்ட பேக்கிங் ஓவனில் சுமார் 20 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

உப்பு பிஸ்கட்
தேவை:

மைதா-  175 கிராம்
சர்க்கரை - 60 கிராம்
டால்டா - 75 கிராம்
உப்பு - 3/4 டீஸ்பூன் (தலை தட்டியது) வெண்ணிலா எசன்ஸ் – சிறிது

இதையும் படியுங்கள்:
சுவையான சுரைக்காய் பாயசம், பன்னீர் ஜிலேபி செய்யலாம் வாங்க!
crunchy biscuits

செய்முறை:
வெண்ணெய் பிஸ்கட்டுக்கு செய்வது போலவே அனைத்து பொருட்களையும் கலவையாக செய்து (கூடுதலாக வெண்ணிலா எசன்ஸ் மட்டும் சேர்த்து) பூரிக்கட்டையால் அரை அங்குல கனத்திற்கு இட்டு பிஸ்கட் கட்டர் அல்லது பாட்டில் மூடியால் வெட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு ஃபோர்க்கினால் பிஸ்கட்டுகளின் மேல் சிறு துளையிட்டு 375 டிகிரி F  வெப்பம் கொண்ட பேக்கிங் ஓவனில் 15 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

ஆரஞ்சு பிஸ்கட்ஸ்
தேவை:

மைதா - 120 கிராம்
டால்டா -70 கிராம்
சர்க்கரை-  60 கிராம்
ஆரஞ்சு எசன்ஸ் -சிறிது
ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிது
முட்டை 1/2 அல்லது 3 டீஸ்பூன் பால்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:
பேக்கிங் பவுடர் கலந்த மைதாவை நன்கு சலித்துக்கொள்ளவும். மைதாவையும் டால்டாவையும் சேர்த்து ஓரளவு பிசைந்து அதனுடன் சர்க்கரை எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து நன்கு பிசைந்து மேலும் முட்டை அல்லது பால் சேர்த்துக் கலந்து பிசையவும். பூரிகட்டை கொண்டு அரை அங்குலம் கனத்திற்கு விரித்து மீடியம் பிஸ்கட் கட்டரால் வெட்டி 370 டிகிரி F வெப்பத்தில் 15 நிமிடம் வேகவிட்டு எடுத்து சுவைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பல(ன்)ம் தரும் 10 ஜூஸ் வகைகள்!
crunchy biscuits

கார பிஸ்கட்
தேவை:

மைதா - 150 கிராம்
சர்க்கரை - 10 கிராம்
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
இஞ்சி கொத்தமல்லி தலை நறுக்கியது அனைத்தும் சேர்ந்து - 10 கிராம் வெண்ணெய் -75 கிராம்
-உப்பு 5 கிராம்
பேக்கிங் பவுடர்-  3/4 டீஸ்பூன்
தயிர் 2 லிருந்து 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
மைதா மாவை பேக்கிங் பவுடர் சேர்த்து இருமுறை சலித்துக் கொள்ளவும். அதனுடன் வெண்ணெய், உப்பு, சக்கரை சேர்த்து பிசையவும். அதேபோல் மிகப் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் மசாலா பச்சை மிளகாய் கருவேப்பிலை இஞ்சி மல்லி ஆகியவற்றையும் சேர்ந்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும். தேவை என்றால் தயிர் சேர்க்கலாம்.  மாவை விரித்து தேவையான கனத்திற்கு வெட்டிக்கொள்ளவும் நெய் அல்லது வெண்ணெய் தடவிய. தட்டில் அடுக்கி 350 டிகிரி F வெப்பத்தில் 15 நிமிடம் பேக்கிங் செய்யவும்.

Read Entire Article