தாய்பாலுக்கு இணையான உணவு; அல்சர் நீங்க, உடல் எடைய குறைய இப்படி சாப்பிடுங்க; டாக்டர் மைதிலி

10 hours ago
ARTICLE AD BOX

தாய்பாலுக்கு இனையான சத்துக்கள் நிறைந்த தேங்காய் பாலில் உள்ள மற்றும் பிற சத்துக்கள் குறித்து மருத்துவர் மைதில் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

Advertisment

இன்றைக்கு இதய நோய் முதல் சர்க்கரை நோய் வரை, புற்றுநோய் முதல் மூளையை பாதிக்கின்ற மறதி நோய் வரை தடுக்கக்கூடிய ஒரு அழகான அருமருந்து தேங்காய்ப்பால் ஆகும்.

தேங்காய் பால் நம் வாயில் இருக்கும் சில கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, நமது ஈறுகள் மற்றும் பற்களை நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதில் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் தேங்காய் செரிமானத்தை மேம்படுத்த உதவும். தேங்காய் பால் புற்றுநோய்க்கு நன்மை பயக்கும். மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.

அல்சரால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், வயிறு மற்றும் குடலில் ஏற்படும் புண்களை சரிசெய்யும் மிகச்சிறந்த அருமருந்தாக தேங்காய்ப்பால் உள்ளது.அல்சருக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை விட வயிற்றுப் புண்ணை தேங்காய் பால் மிக வேகமாக ஆற்றும் என மருத்துவர் மைதிலி கூறுகிறார்.

Advertisment
Advertisements

தேங்காய்ப் பால் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயை உண்டாக்கும் உயிரணுக்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.100 கிராம் தேங்காய் பாலில் கலோரிகள், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, சாச்சுரேட்டட் கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவை உள்ளன.இதிலுள்ள ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் குடலில் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Read Entire Article