தாயை விட பெரிய சக்தி உண்டோ….! 80 வயதில் மகனின் உயிரை காப்பாற்றிய தாய்…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!

4 hours ago
ARTICLE AD BOX

டெல்லி ரோகிணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தொழிலதிபர். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்தது. இந்த நிலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் ராஜேஷின் 80 வயது தாய் தர்ஷனா ஜெயினின் சிறுநீரகங்கள் ராஜேஷுக்கு பொருத்தமாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஆனால் ராஜேஷ் தனது தாய் வயதானவர் அவரது சிறுநீரகத்தை எடுக்க வேண்டாம் என முடிவு செய்தார்.

பின்னர் காலப்போக்கில் ராஜேஷின் உடல்நலம் மோசமானது. இதனால் மாற்று அறுவை சிகிச்சைக்கு ராஜேஷ் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மற்ற அறுவை சிகிச்சை நிபுணர் எச் எஸ் பட்யால் தலைமையிலான மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக சிறுநீரக மாற்று  அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு நான்காவது நாளில் தர்ஷனா ஜெயின் குணமடைந்தார். அதிலிருந்து இரண்டு நாட்களுக்கு ராஜேஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது தாயும், மகனும் நலமாக உள்ளனர்.

Read Entire Article