ARTICLE AD BOX
கைதி - 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்படத்திற்குப் பின், ’வா வாத்தியர்’ வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அதேநேரம், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 படத்திலும் தீவிரமாக நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: கூலி - ரஜினியின் மகளாக ஷ்ருதி ஹாசன்?
இப்படத்திற்குப் பின் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்த கார்த்தி, ‘டில்லி ரிட்டன்ஸ்’ எனக் குறிப்பிட்டு லோகேஷை வாழ்த்தியுள்ளார். இதனால், கைதி - 2 படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
DILLI RETURNS
Let it be another fantastic year @Dir_Lokesh@DreamWarriorpic @KvnProductions pic.twitter.com/sLLkQzT0re
நடிகர் ரஜினியை வைத்து கூலி படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதன் வெளியீடு முடிந்ததும் கைதி - 2 படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.