தமிழகத்தில் ஒவ்வொரின் பெயரிலும் ரூ.94,000 கடன் இருக்கு.. டேட்டாவோடு திமுகவை சாடிய அன்புமணி

4 hours ago
ARTICLE AD BOX

தமிழகத்தில் ஒவ்வொரின் பெயரிலும் ரூ.94,000 கடன் இருக்கு.. டேட்டாவோடு திமுகவை சாடிய அன்புமணி

Chennai
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழக அரசின் நேரடி கடன் 4 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக இருந்தது ஆனால் இன்று 9 லட்சத்து 40 ஆயிரம் கோடி கடன் உள்ளது. தமிழக அரசு தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ஒரு லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளது. தமிழக அரசு நேரடி கடன், மறைமுக கடன் என மொத்தமாக 14லட்சம் கோடி கடன் சுமையை கூட்டி உள்ளது.'' என்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதன்பிறகு நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

இதையடுத்து ஏற்கனவே பாமக சார்பில் வெளியிடப்பட்ட வேளாண் மற்றும் பொத நிழல் நிதி நிலை அறிக்கை(பட்ஜெட்) விளக்க கூட்டம் சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பாமகவின் நிழல் பட்ஜெட்க்கும் தமிழக அரசு வெளியிட்ட நிஜ பட்ஜெட்க்கும் உள்ள வித்தியாசங்கள் குறித்து விரிவாக பேசினார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் பேசும்போது கூறியதாவது:

every-person-in-tamil-nadu-has-a-debt-of-rs-94-000-in-their-name-says-anbumani-ramadoss-and-slams

ஒருவர் தலையில் ரூ.94 ஆயிரம் கடன்

தமிழக அரசின் நேரடி கடன் 9லட்சத்து 40,000 கோடி மறைமுக கடன் ஐந்தரை லட்சம் கடன் மொத்தமாக சேர்த்து பார்த்தால் 14 லட்சத்து 60,000 கோடிக்கு கடன் வாங்கி இருக்கிறார்கள். தமிழக அரசு தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ஒரு லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழக அரசின் நேரடி கடன் 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி. ஆனால் இன்று 9 லட்சத்து 40 ஆயிரம் கோடி கடன். இந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு இரண்டு மடங்கு கடனை வாங்கி இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடந்த 74 ஆண்டுகள் பெற்ற கடனை திமுக அரசு 4 ஆண்டுகளில் பெற்றுள்ளது. இது ஒரு ஆட்சியா? இது ஒரு நிர்வாகமா?.

வெறும் ரூ.1,000 கோடி ஊழல்தானா? திமுகவை காப்பாற்றுவதே பாஜகதான்- 'டாஸ்மாக்' விவகாரத்தில் சீமான் பகீர்!
வெறும் ரூ.1,000 கோடி ஊழல்தானா? திமுகவை காப்பாற்றுவதே பாஜகதான்- 'டாஸ்மாக்' விவகாரத்தில் சீமான் பகீர்!

ரூ.40 ஆயிரம் கோடிக்கு மணல் விற்பனை

கடன் வாங்கி ஆட்சி நடத்துவது பெரிய விஷயமா? அதை யார் வேண்டுமானாலும் செய்து விட்டு போகலாமே. திறமையான நிர்வாகம் என்றால் வரி அல்லாத வருவாயை உருவாக்க வேண்டும். வரி போட்டு வருவாயை உருவாக்குவது பெரிய விஷயம் கிடையாது. மக்களை வரிச் சுமையில் அழுத்தக் கூடாது. தமிழகத்தில் இரவு ,பகல் என கணக்கு வழக்கு இல்லாமல் மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது ஆனால் வருமானம் கேட்டால் வெறும் 40 கோடி தான் என தமிழக அரசு சொல்கிறது. அடப்பாவிகளா..! ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மணலை விற்றுவிட்டு வெறும் 40 கோடி மட்டும் கணக்கு காட்டுகிறார்கள். இந்த மணல் விவகாரத்தில் மட்டும் நான்கரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை கொடுக்கிறது.

மோசமான நிர்வாகம்

இதுபோன்று தமிழக அரசுக்கு வரவேண்டிய வருவாயை எல்லாம் கொள்ளையடித்துவிட்டு பிறகு கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கு என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை மிக மோசமான நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாமகவின் நிழல் பட்ஜெட்டில் 65,000 கோடி ரூபாய் வேளாண்துறைக்கு ஒதுக்கப்பட்டது ஆனால் தமிழக அரசு போட்டுள்ள இந்த பட்ஜெட்டில் 15000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வழங்காத அரசு

பாமக பட்ஜெட்டில் நீர் பாசன திட்டங்களுக்கு 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர மீன்வளத்துறை பால்வளத்துறை இதுபோன்ற துறைகளுக்கு 25000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு நீர் பாசன திட்டங்களுக்கு வெறும் 2000 கோடி ஒதுக்கி உள்ளது இது எப்படி போதுமானதாக இருக்கும். காலநிலை மாற்றம் பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளை எல்லாம் எதிர்காலத்தில் அதிக அளவில் வரும்... உங்களால் கார்த்திகை மாதத்தோடு மழை நின்று விடும்.

ஆனால் இப்போது சம்பந்தமே இல்லாமல் தை மாதத்தில் கூட மழை பெய்கிறது.... அந்த வாரம் கூட சென்னையில் மழை பெய்தது இப்படி பருவங்கள் மாறி மாறி மழை பெய்யக்கூடிய மோசமான சூழல் உருவாகி வருகிறது இதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதற்கு நீர் பாசன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெய்யும் மழை நீரை தேக்கி வைக்கக்கூடிய திட்டங்கள் இந்த தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வில்லை.

மோடியை திடீரென பாராட்டி தள்ளிய செங்கோட்டையன்.. பாஜக செல்கிறாரா?
மோடியை திடீரென பாராட்டி தள்ளிய செங்கோட்டையன்.. பாஜக செல்கிறாரா?

மாற்றி மாற்றி பேசும் முதல்வர்

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி விட்டோம் என முதலமைச்சர் பேசுகிறார் ஒருநாள் 99 சதவீதம் என்கிறார். அடுத்த நாள் சொல்கிறார் இல்லை 88% நிறைவேற்றி விட்டோம் என்கிறார். 92%, 85% என மாற்றி மாற்றி பேசி வருகிறார் முதலமைச்சர்.காசா பணமா அடித்து விடுவோம் என அள்ளி விடுகிறார்கள்.

2 மணி நேரம் 40 நிமிடங்கள் பேசும் அளவிற்கு அந்த பட்ஜெட்டில் என்ன இருந்தது தூக்கம் தான் இருந்தது அதை தவிர வேறொன்றும் இல்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பள்ளிகள் துறைக்கு 2000 கோடி தான் கூடுதலாக கொடுத்திருக்கிறார்கள் அது எப்படி போதுமானதாக இருக்கும். குறைந்தது 85 ஆயிரம் கோடி பள்ளிகல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டும் அப்போதுதான் தரமான பட்ஜெட் போட முடியும்.

சட்டம் - ஒழுங்கு இல்லை

குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பவே பயமாக இருக்கிறது. ஆசிரியர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். 7 இளைஞர்கள் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். இது தமிழகத்தின் கலாச்சாரம் கிடையாது. இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி மிருகங்களாக மாற்றிக்கொண்டு இருக்கிறது திமுக அரசு. சட்டம் ஒழுங்கு ஒன்றும் கிடையாது.

நல்ல திறமையான காவல்துறை அதிகாரிகள் இன்று பனிஷ்மென்ட் போஸ்டில் இருக்கிறார்கள். பல காவல்துறை அதிகாரிகள் ஆளும் தரப்பினருக்கு செக்யூரிட்டி போல செயல்பட்டு வருகிறார்கள். காவல்துறைக்கு தெரியாமல் தமிழ்நாட்டில் ஒரு பொட்டலம் கஞ்சாக விற்க முடியாது. வாங்குபவனுக்கு கஞ்சா எங்கு கிடைக்கிறது என தெரிகிறது ஆனால் காவல்துறைக்கு தெரியாதா. தமிழ்நாடு கிடையாது கஞ்சா நாடு என மாறிவிட்டது...

இக்கட்டான சூழலில் இருக்கிறேன்.. ஆனால் வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன் - செங்கோட்டையன்
இக்கட்டான சூழலில் இருக்கிறேன்.. ஆனால் வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன் - செங்கோட்டையன்

‛ரூ’ சிம்பள் விவகாரம்

தமிழக மதுவிலக்கு துறையில் மேலோட்டமாக ஆய்வு செய்ததில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று இருப்பதாக தகவல் வந்தது. இன்னும் ஆழமாக சென்றால் 40 ஆயிரம் கோடி இன்னும் ஆழமாக சென்றால் நாலு லட்சம் கோடி வெளிவரும்...
இதை திசை திருப்புவதற்காக திமுக சிம்பிளில் உள்ள 'ரூ' என மாற்றி உள்ளது.
திமுகவும் காங்கிரசும் ஆட்சியில் இருந்தபோது தான் தற்போதைய ரூபாய் சிம்பிள் கொண்டுவரப்பட்டது அதை இப்போது திமுக எதிர்கிறது. பேச வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ உள்ளது.

ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு மொழி பிரச்சனையை உருவாக்குகிறார்கள் திமுகவும் பாஜகவும் பேசி வைத்துக்கொண்டு செயல்படுவது போல உள்ளது. வட மாநிலத்தில் இருப்பவர்கள் ஹிந்தியை எப்படியாவது தேசிய மொழி ஆக்கிவிட வேண்டும் என செயல்பட்டு வருகிறார்கள். 1930 காலகட்டத்திலிருந்து சுமார் 100 ஆண்டுகளாக இந்த இந்தி திணைப்பு முயற்சி நடைபெற்று வருகிறது. அதனுடைய தொடர்ச்சி தான் இன்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழுக்கு திமுக என்ன செய்துள்ளது?

மொழியை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை தமிழுக்கு என்ன செய்துள்ளது தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளது வெட்கக்கேடு இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தாய் மொழியை படிக்காமல் பட்டம் வாங்க முடியும் என்றால் அது தமிழ்நாட்டில் மட்டும்தான் வேறு எந்த மாநிலத்திலும் அவர்களின் தாய் மொழியைப் படிக்காமல் பட்டப் பெற முடியாது. இது வெட்கக்கேடு, கேவலம். கேட்டால் திராவிடம் மாடல் என்கிறார்கள் என்னையா மாடல் இது ?

தமிழ் ஒரு பாடமாக கூட படிக்காமல் பிஎச்டி கூட பெற்றுவிட முடிகிறது தமிழகத்தில்..
‌ திமுக அரசு தமிழ் பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது. தமிழ் பயிற்று மொழியாக கொண்டுவரப்பட வேண்டும் என்ற வழக்கு 26 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தூங்கிக் கொண்டுள்ளது இதே டாஸ்மாக் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருந்தால் மூத்த வழக்கறிஞர்களை அடுத்த நாளே கொண்டு வந்து இறக்குகிறார்கள். பாமகவைப் பொறுத்தவரை ஒரு மொழிக் கொள்கைதான் எங்களின் நிலைப்பாடு.

3வது மொழி கற்பதில் தவறில்லை

தாய் மொழியை நன்றாக் கற்றுக்கொள்ளலாம். உலக அளவில் இணைப்பு மொழி ஆங்கிலம் உள்ளது. மூன்றாவது மொழி கற்றுக்கொள்வது தவறு கிடையாது. ஆனால் திணிப்பது தவறு.
இருமொழிக் கொள்கை 60 ஆண்டு காலமாக வெற்றிகரமாக உள்ளது. பொருளாதாரத்தில், கல்வியில், சுகாதாரத்தில் சிறப்பான இடத்தில் உள்ளது தமிழ்நாடு. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நிதியை தரமாட்டோம் என்று சொல்வது தவறான போக்கு. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டணியில் இருந்தாலும் பரவாயில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 45 ஆண்டுகளாக மருத்துவர் ராமதாஸ் போராடி வருகிறார் எம்ஜிஆர் முதல் எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் ஸ்டாலின் வரை அனைத்து முதலமைச்சர்களையும் பார்த்து பேசி விட்டார்'' என்று விமர்சனம் செய்தார்.

More From
Prev
Next
English summary
"Before DMK came to power, the direct debt of the Tamil Nadu government was 4 lakh 40 thousand crores, but today it is 9 lakh 40 thousand crores in debt. The Tamil Nadu government has taken a loan of one lakh 94 thousand rupees in the name of each person in Tamil Nadu. The Tamil Nadu government has accumulated a total debt burden of 14 lakh crores, including direct debt and indirect debt," PMK leader Anbumani Ramadoss strongly criticized.
Read Entire Article