ARTICLE AD BOX
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.
இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, வரும் 7ஆம் தேதி (07.03.2025) மாலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது.
இதையும் படிக்க: ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

இதில் தவெக தலைவர் விஜய், இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.
மக்ஃரிப் தொழுகை முடிந்ததும் தவெக சார்பில் இஃப்தார் விருந்து நடைபெறும் என்று தவெக வெளியிட்ட அறிக்கையில் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.