தளபதி விஜய்யின் சொந்த கிராமம் எங்கு இருக்கிறது தெரியுமா?

3 hours ago
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருந்த விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி உள்ளார்.  தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார். முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிந்த நிலையில், தற்போது கட்சியில் நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர். தற்போது ஜனநாயகன் என்ற தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்நிலையில் விஜய்யின் சொந்த கிராமம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது, இந்த கிராமத்திற்கு விஜய் வருவாரா என்று அந்த பகுதியில் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தும் உள்ளனர்.

மேலும் படிக்க | இந்தியாவில் முதல்முறை.. புற்றுநோய் மரபணு தரவுத் தளம் சென்னை ஐஐடி-யில் அறிமுகம்!

விஜய்யின் கிராமம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது கொம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பத்துக்கு மேலாக வசித்து வருகின்றார். இந்த கிராமம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தந்தை இயக்குனர் S.A சந்திரசேகர் சொந்த கிராமம் என்று கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் தூய மிக்கேல் அதிதூதர் பங்கின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 75 ஆவது பவள விழா  கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவின் போது வெளியிடப்பட்ட பவள விழா மலர் மூலமாக இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத் தீயாக பரவி வருகிறது.

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தந்தை சேனாதிபதி பிள்ளை காலம் வரை இந்த கிராமத்தில் வாழ்ந்து உள்ளனர். சேனாதிபதி பிள்ளை ரெயில்வேயில் பணிபுரிந்த காரணத்தினால் அவரது குடும்பத்தினர் பரமக்குடி சென்றுவிட்டனர்.‌ கொம்படி கிராமத்தில் இன்னும் எஸ்.ஏ. சந்திரசேகர் உறவினர்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்கள் முன்னோர் வாழ்ந்த வீடு, நிலங்கள் உள்ளன. இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் பூர்வீகம் தங்கள் கிராமம் என்றும், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் விஜய் திரைப்பட துறையில் சாதித்தது தங்களது கிராமத்திற்கு பெருமை என்றும், தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் கட்சிக்கு ஆதரவாக இருப்போம், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் விஜய் தங்களது கிராமத்திற்கு வர வேண்டும் என்று நெகிழ்வுடன் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலையா? அண்ணாமலை ஆவேசம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article